வியாழன், 26 ஜூலை, 2018

தேடித்திரிய நாதியுண்டோ...?

தேடித்திரிய நாதியுண்டோ...?

முந்தைய கவிதை
👇👇👇


"ந்தக்கவிதையை எழுதி வைத்து நெடுநாட்கள்
ஆகிவிட்டது , அதை பதிவிட இன்றுதான் அதற்கு
விதி வழி விட்டது போல..!

இது "மழை" இல்லாமல் வறட்சியை சந்தித்த பூமியை
பார்த்து தன் தலையை சாய்த்து உயிர் மாய்த்த தென்னை
மரங்களைப் பார்த்து மனம் நொந்ததினால் எழுதி வைத்தேன்,

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் பெய்த "மழை"கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பெய்திருந்தால்
இந்த வருத்தம் வந்திருக்குமா...?

இதற்கு காரணம் யார்...?

அதையே இந்தக்கவிதையில் எழுதியுள்ளேன்,
பிழைகள் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்🙏"



ச்சி வெயிலில்
காயும் தென்னை
மண்ணை மஞ்சமாக்கி
சாயுதே இங்கே...!

காணாமல் போன
மாரியும் எங்கே...!
தேடித் திரிய
நாதியும் உண்டோ...!

மாரி மிதக்கும்
கார்முகில் எங்கே...!
சுட்டெரிக்கும் சூரியனால்
தீய்ந்தே போனதோ...

வெட்டும் மரங்களின்
கொட்டும் சாபத்தால்,
தூரத்தின் சூரியன்
பக்கத்தில் ஆனதால்,

சோலை வனமெங்கும்
பாலைவனம் ஆனது
சினம் தணியா ஆதவனின்
சுட்டெரிக்கும் தீ கதிராலோ...!

மெய்ஞானம் மறந்து
விஞ்ஞானம் வளர்த்து
வீண் ஞானம் கொண்ட
மதிகெட்ட மாந்தர்களாலோ...!


இதற்கு நாமும் விதிவிலக்கல்ல,ஒரு மரம் இடையூறு என்றால் அதே வேருடன் வெட்டுவதில் நாமும் கில்லாடிகளே...
அதில் நானும் ஒருவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.

கீழ்காணும் புகைப்படம் கைப்பேசியில் க்ளிக்கியது , எங்கள் வீட்டுப்பக்கம் எத்தனையோ தென்னை மரங்கள்
மாண்டு போயின,இந்தப் புகைப்படத்தில் காண்பது
ஓரிடத்தில் மொத்தமாக மாண்ட தென்னைமரங்கள்,
சாதாரணமாக புகைப்படம் தெளிவாக வரும்,இது
Panorama Option இல் க்ளிக்கியதால் கொஞ்சம் தெளிவு கம்மியாகவே இருக்கும்.
Ajai Sunilkar Joseph







16 கருத்துகள்:

  1. மண்ணை மஞ்சமாக்கி என்று வருவது பொருந்தவில்லையோ... இப்படிச் சொன்னாலே சுக நித்திரை என்பது போல அல்லவா பொருள் வரும்!

    மற்ற வரிகள் அருமையாக வந்துள்ளன. மரங்களை நாம் இழப்பது நமக்கே கேடு என்பதை உணர்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நண்பரே...இறப்பவர்கெல்லாம் மண்தானே மஞ்சம்,
      அதனால்தான் அப்படி எழுதினேன்.

      நீக்கு
  2. மாண்டுபோன தென்னம்'பிள்ளை'களுக்கு சமர்ப்பணம்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் வரிகள் அருமை தோழர்...

    இன்னும் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கப் போகிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே...
      நடப்பவை எல்லாம் நன்மைக்கென்றே
      எடுத்துகொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
  4. வருந்தி வருந்தி நிறுத்திக் கொண்ட கலைஞர்களை கண்டு விட்டேன்..
    அப்படியே களமாடும் கலைஞனை காணவும் காத்திருக்கிறேன்..
    இதே மண்ணில்...

    இயற்கை மீதான உங்கள் அக்கறை செயல்வடிவம் பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...
      மாறாதா என வருத்தம்தான் எல்லார்க்கும்...

      நீக்கு
  5. அருமை நண்பரே ஆக்கபூர்வமான படைப்பு.
    மதிகெட்ட மனிதரின் வீணான ஞானத்தால் செயற்கையும் இயற்கையை அளிக்கிறது.
    வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்துவதை தவிர வேறு வழியில்லையே,முடிந்தால் ஒரு மரக்கன்றையாவது
      நடலாம்.

      நீக்கு
  6. மெய்ஞானம் மறந்து
    விஞ்ஞானம் வளர்த்து
    வீண் ஞானம் கொண்ட
    மதிகெட்ட மாந்தர்களாலோ....உண்மை உண்மை...

    பதிலளிநீக்கு
  7. மாண்ட தென்னை மரங்கள் - திருச்சி பக்கங்களில் நிறைய தென்னை மரங்கள் காய்ந்து சருகாகிப் போனதைப் பார்த்த போது ஏற்பட்ட வருத்தம் இப்போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, இப்போதும் எங்கள் வீட்டருகில்
      இதைப் பார்க்கும்போது வேதனையே...!

      நீக்கு
  8. அருமையான வரிகள், தொடருங்கள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!