சனி, 28 ஜூலை, 2018

துயில் கொள்ளப் போனாயோ...?

துயில் கொள்ளப் போனாயோ...?

முந்தைய கவிதை
👇👇👇👇👇

னக்காக
ஏங்கிநின்றேன்,
எங்கெங்கோ
தேடிப்பார்த்தேன்,

முகிலின் மடியில்
தேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன்,

கிணற்றின் அடியில்
எட்டிப்பார்த்தேன்,
குளத்தில் கொஞ்சம்
மூழ்கிப்பார்த்தேன்,

நான் தேடாத
இடமுமில்லை,
தேடிப்பார்த்த
தடமுமில்லை,

கண்ணெட்டும்
தூரம் தேடுகிறேன்,
இருள் வான் மட்டும்
காண்கிறதே...!

தொலை தூரம்
நின்றே தேடுகிறேன்,
நீயும் தொலைந்தே
போனாய் என்றதினால்,

உன்னைக் காணா
ஏக்கமதில்
தூக்கமில்லை
கண்களிலே,

என் தூக்கமெல்லாம்
கலைத்துவிட்டு
துயில்கொள்ளப்
போனாயோ வெண்ணிலவே...!

Ajai Sunilkar Joseph 



By...Ajai Sunilkar Joseph 


16 கருத்துகள்:

  1. வெண்ணிலா கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ ஹா தங்கள் வருகைக்கும்
      கருத்துரைக்கும் நன்றிகள் பல ...

      நீக்கு
  2. மேகத்தந்தை முகிலாடையால் நிலாமகளை மறைத்து வைத்திருக்கிறான் போலும்.

    பதிலளிநீக்கு
  3. அருமை... "நிலவும் நீயும் நானும்" என்ற எனது இரு தொகுப்புகளையும் பதிவிறக்கம் செய்து படித்து உங்கள் கருத்துக்களையும் பகிரவும்..

    பதிலளிநீக்கு
  4. கவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகிலின் மடியில்
      தேடிப்பார்த்தேன்,
      தொடுவான எல்லைத்
      தாண்டிப்பார்த்தேன், மனத்தைத் தொட்ட வரிகள்

      நீக்கு
    2. அபயா அருணா நட்புக்கு வணக்கம்...!
      தங்களின் முதல் வருகையென நினைக்கிறேன்.
      தங்களது கருத்துரைக்கும் ,வருகைக்கும்
      நன்றிகள் பல...!

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!