உன்னிடம் தட்சணையாக...
உன்னிரு இதழ்களின்
வன்முறைகளுக்கும் மொழியினால்உருவம் கொடுத்துப்பார்க்கிறேன்,
அது முத்தம் என்ற பெயரில்
என்னில் தொடர்வதால்,
கத்தியும்,இரத்தமும் இன்றி
என்னை வீழ்த்தும் யுக்தியை
எனக்கும் கற்றுக்கொடு பெண்ணே...!
உன் விழிவாள் முனையில்
எனை நிறுத்தி சாய்த்து விடாதே,
நால்விழிகளும் மௌன மொழியை
பேசி காதலாய் மொழிபெயர்ப்போம்,
என் காதல் சாம்ராஜ்யத்தையே
உன்னிடம் தட்சணையாக தருகிறேன்...
![]() |
Ajai Sunilkar Joseph By... |
இந்த தட்சணையால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்று அவள் சொல்லி விட்டால்? ஹா.. ஹா... ஹா..
பதிலளிநீக்குரசித்தேன்.
அப்படிதான் சொல்கிறாள்...
நீக்குநன்றி நண்பரே...!
அருமை அருமை நண்பா
பதிலளிநீக்குநன்றிகள் பல...!
நீக்குகாதல் சாம்ராஜ்யத்தைத் தருவது விழிவாள் முனையில் நிறுத்திச் சாய்த்து விடுவாளோ என்ற அச்சத்தால் தானோ!
பதிலளிநீக்குஆம் நண்பரே...!
நீக்கு