செவ்வாய், 24 ஜூலை, 2018

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...

எல்லாம் 
ஒரு 
எதிர்பார்ப்புதான்...

முன்தின பதிவு
👇👇👇👇👇

ன்
காதல்
கவிதைகளாகத்
தொடர்கிறது...

என் காதலி யாரென்று
கேட்டால்
காதலியே கவிதைகள்
தான் என்பேன்,

நான் காதல்
கொண்டது
அவளிடமா
என் கவிதைகளிடமா...?

அவளால்தான் கவிதைகள்
கண்டேன்,பின்னர்
அவளையே கவிதைகளாய்
கொண்டேன்,

அவள் விழிகளைப்
பார்த்தால் விண்ணைத்
தொடுமளவும் கவிதைகளை
அடுக்கி வைப்பேன்,

நேருக்கு நேர்
நின்று அவள் கூர்வாள்
விழிகளை நான் இன்னும்
பார்க்கவில்லை,

பார்த்திருந்தால்
சொல்லியிருப்பேன்
யார்தான்
அவளென்று...

அவளை ஒருமுறைப்
பார்த்தால் போதும்
ஏழேழு ஜென்மங்களும்
தொடர்வேன்
அவளுக்கான வரிகளை,

அவள் எங்கேயென்று
கேட்க வேண்டாம்
கேட்டால் எனக்குச்
சொல்லத் தெரியாது,

இதயத்திலே
இருக்கிறாளா என்றால்
இதயமாகவே
இருக்கிறாள் என்பேன்,

கண்களிலே
இருக்கிறாளா என்றால்
என் கண்களே
அவள் தான் என்பேன்...

என் விழிகளின்
விழித்திரையில்
அவளே வந்து
சுற்றித்திரிகிறாள்,

என் கனவு
தேசத்தை அவளே
ஆக்கிரமித்து காதலால்
ஆட்சி செய்கிறாள்,

எனக்கு என்னமோ
என்னவள் என் கவிதைகளிலே
உயிர்கொண்டு அதிலே
குளிர்காய்கிறாள்
என்றுத் தோன்றுகிறது,

எங்கே,
எப்படி
அவளை
கண்டுபிடிப்பேன்...?

பூவிடம் கேட்டால்
சொல்லிவிடுமா,
அவளையே
முகவரியாய் கொண்ட
பூங்காற்று சொல்லிடுமா...?

வேண்டாம்...வேண்டாம்...
இரண்டுமே
பூவையவளிடம்
பொறாமை கொள்ளும்

பருவகால வானவில்லிடம் கேட்டால்
கோடி வானவில்லும்
கூடிவந்து குடிகொண்ட
அவளின் புருவம்
பார்த்து நாணம் கொள்ளும்...!

எங்கே
தேடுவேன்
எந்தன்
இதயராணியை...?

காத்திருக்கலாமா
யார்தான் அவளென்று...?

இங்கே காத்திருந்து
கரையோரம் சிதறுகிறேன்
அவளுக்கான
தேடல் வரிகளை,

கொஞ்சம் வாசித்து
எந்தன் யாசிப்பை
புரிந்தவளாய்
வருவாளா...?

காத்திருக்கிறேன்
தேவதையே...

விரைவாய் வா
உன் நெஞ்சோடு
என்னை
அணைத்துக்கொள்ள...!

Ajaj Sunilkar Joseph 




12 கருத்துகள்:

  1. காதலியாகும் கவிதைகள். அருமை.

    பதிலளிநீக்கு
  2. அப்படியே நினைவில் மட்டும் இருக்கட்டும், எங்களுக்கு ரசிக்க கவிதைகள் வேண்டாமா...?

    பதிலளிநீக்கு
  3. காதலியை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கேட்க ஆசை. ஆனால் நீங்களே இன்னும் பார்க்கவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் வரட்டும் அறிமுகம் செய்கிறேன் அன்பரே,
      அதுவரை கவிதைகளையே என்னவளாய் நான் தொடர்கிறேன்...

      நீக்கு
  4. மிகவும் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கையே எதிர்பார்ப்புடன்தான் ஓடுகிறது....

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!