ஞாயிறு, 22 ஜூலை, 2018

அம்மா...

அம்மா


ன்னை உருவில் 

காணுமுன்னே 

கருவில் கொண்டவள்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் பிறந்ததும் 

ஆனந்த வானில்

பறந்திருப்பாள் 

அம்மா...!


Ajai Sunilkar Joseph 


காற்றை  முந்தாணைக்குள்

வடிகட்டி சுவாசிக்கத் தந்த

மூன்றெழுத்து மந்திரம்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் இறைவன் 

படைப்பாயினும்

வலியடைந்தவள்

நீதானே...

அம்மா...!


Ajai Sunilkar Joseph 



வள் இரத்தம் கொஞ்சம்,

அவள் சதையில் கொஞ்சம்,

அவள் சுவாசம் கொஞ்சம்,

அவள் பாசம் கொஞ்சம்,

அவள் ஏக்கம் கொஞ்சம்,

அவள் பரிதவிப்பு கொஞ்சம்,

அவள் வலியில் கொஞ்சம்,

அவள் உணர்வில் கொஞ்சம்,

அவள் உயிரில் கொஞ்சம்,

அவள் அழுகயில் கொஞ்சம்,

அவள் கண்ணீரில் கொஞ்சமாய்,

அனைத்திலும் பிய்த்தெடுத்த

மிச்சமே நான்...


Ajai Sunilkar Joseph 









18 கருத்துகள்:

  1. எல்லாமே அருமை. பெரிய கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி நண்பரே ...

      அம்மா என்றால் எளிதான வார்த்தை
      ஆனால் அதன் பின்னணியில் இருப்பதை
      புரிந்தால் கடினமானதி அல்லவா...!

      நீக்கு
  3. நெஞ்சை நெகிழசெய்துவிட்டாய் அம்மாஉயிர்உள்ளதெய்வம் நடமாடும்கடவுள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரறியாத நட்புக்கு வணக்கம்...!
      கருத்துரைக்கு நன்றிகள் பல , தங்கள்
      பெயருடன் கருத்துரை தந்தால் தங்களை
      அறிந்து கொள்வோம்...

      நீக்கு
  4. மனதைத் தொட்ட கவிதைகள். பாராட்டுகள்.

    தொடரட்டும் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  5. bro which theme are u using

    பதிலளிநீக்கு
  6. கவிதையிலும் சிறந்த கவிதை அம்மா பற்றி எழுதுவது. இதுவும் அப்படிதான்.

    பதிலளிநீக்கு
  7. அம்மாவின் கவிதை அழகோவியம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே...!

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!