கனவில் என் கற்பனை
ஆழி முத்துகள் இரண்டை
அவள் விழிகளாய் கண்டேன்,ரசிக்கலாம் என்றே
அருகினில் சென்றேன்,
குழிகள் இரண்டை
அவள் கன்னத்தில் கண்டேன்,
கொஞ்சம் வழுவி
அதனுள் வீழ்ந்தேன்,
எழும்பிட நினைத்தேன்,
மயங்கியே கிடந்தேன்,
மங்ககை விழியும்,கன்னக்
குழியும் போதும் வீழ்த்திட...?
அவளோ பூஞ்சிலை
போன்ற பெண்சிலை,
எனக்குத் தாரமான
தங்கத் தாமரையவள்,
அங்கத்தின் அழகை நான்
இன்னும் சொல்லவில்லை,
என்னில் ஓர் அங்கமாய்
அவள் இருப்பதினால்,
அன்பை அள்ளித் தந்திடுவாள்
அன்னைப் போல தாங்கிடுவாள்,
எனக்காய் வந்த தேவதை
எனக்கு மட்டும் தெய்வமவள்,
கண்களில் கனவு தேவதையாய்
அவளே எந்தன் கலங்கரையாய்,
கருப்போ,வெளுப்போ தெரியவில்லை
அவள் எங்கிருக்காளோ புரியவில்லை...
![]() | ||||||||||||||||||||||||||||||||||
Ajai Sunilkar Joseph |

தாரமான தங்கத்தாமரை அவள் அருமை.
பதிலளிநீக்குநன்றி ப்ரதர்...!!!😄😄😄
நீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குநன்றி..! நன்றி...!
நீக்குகனவு தேவதை சீக்கிரம் கைகளில் தழுவட்டும்.. சே.. தவழட்டும்!
பதிலளிநீக்குHa haa நன்றி நண்பரே...!
நீக்குகாத்திருப்புகளும், எதிர்பார்ப்புகளுமாக கவிதைப் பயணம் தொடருது.. அழகியலின் கரங்கள் பற்றியபடியே... வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...?
நீக்கு