காகிதத்திடம் என் காதல்
பேனாவின் முத்தத்தடத்தில்
பதிந்த வார்த்தைகளை நேசித்தாள்,
வலிகளுடன் நான் படைத்த
என் வரிகளை நேசித்தாள்,
அந்த வரிகளைப் படைத்த
என் கரங்களை நேசித்தாள்,
வரிகள் வழியே அவள் இதயம்
நுழைந்த கவிதைகளை நேசித்தாள்,
என்னிதயம் வரிகளில் தொடுத்த
காதலை நேசித்தாள்,
இப்படியே அவளுள் சென்ற
என்னை மொத்தமாய் வாசித்தாள்,
இவைகளை யாசித்த அவளோ
இறைவன் படைத்த வெள்ளைத்தாள்,
காகிதமாய் அவளிருக்க என்
பேனாவின் ஒத்தடங்களாய்
காதலைச் சொல்கிறேன்,
அவளிடமே என் வரிகள்
அனைத்தையும் படைக்கிறேன்,
அவளுக்கு என் இதயத்தில்
நான் காதல் படைத்ததால்...
![]() |
-Ajai Sunilkar Joseph |
ஒத்தடங்களுக்கு ஒத்த தடங்கள் அவளிடமிருந்து வந்தால் சுகம்.
பதிலளிநீக்கு"வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குதான் ராகம் புரிகிறது, நேசிக்கத் தெரிந்த இதயங்களுக்குதான் என் காதல் புரிகிறது, உனக்கெங்கே புரியப்போகிறது" என்று மு மேத்தா சொன்னது போல..
ஹ ஹா சரியாகத்தான் சொல்றீங்க..
நீக்குஇனிமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே நன்றி
நீக்குவெள்ளைக் காகிதத்தின் மனம் ஏனோ கருமையாய் போனதோ?
பதிலளிநீக்குவெள்ளை மனம் படைத்த வெள்ளை காகிதம் நிச்சயம் உணரும் வலிகளின் வரிகள்...
அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.
நன்றி ...!
நீக்கு