காதல் விண்ணப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் விண்ணப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









செவ்வாய், 24 ஜூலை, 2018

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...

எல்லாம் 
ஒரு 
எதிர்பார்ப்புதான்...

முன்தின பதிவு
👇👇👇👇👇

ன்
காதல்
கவிதைகளாகத்
தொடர்கிறது...

என் காதலி யாரென்று
கேட்டால்
காதலியே கவிதைகள்
தான் என்பேன்,

நான் காதல்
கொண்டது
அவளிடமா
என் கவிதைகளிடமா...?

அவளால்தான் கவிதைகள்
கண்டேன்,பின்னர்
அவளையே கவிதைகளாய்
கொண்டேன்,

அவள் விழிகளைப்
பார்த்தால் விண்ணைத்
தொடுமளவும் கவிதைகளை
அடுக்கி வைப்பேன்,

நேருக்கு நேர்
நின்று அவள் கூர்வாள்
விழிகளை நான் இன்னும்
பார்க்கவில்லை,

பார்த்திருந்தால்
சொல்லியிருப்பேன்
யார்தான்
அவளென்று...

அவளை ஒருமுறைப்
பார்த்தால் போதும்
ஏழேழு ஜென்மங்களும்
தொடர்வேன்
அவளுக்கான வரிகளை,

அவள் எங்கேயென்று
கேட்க வேண்டாம்
கேட்டால் எனக்குச்
சொல்லத் தெரியாது,

இதயத்திலே
இருக்கிறாளா என்றால்
இதயமாகவே
இருக்கிறாள் என்பேன்,

கண்களிலே
இருக்கிறாளா என்றால்
என் கண்களே
அவள் தான் என்பேன்...

என் விழிகளின்
விழித்திரையில்
அவளே வந்து
சுற்றித்திரிகிறாள்,

என் கனவு
தேசத்தை அவளே
ஆக்கிரமித்து காதலால்
ஆட்சி செய்கிறாள்,

எனக்கு என்னமோ
என்னவள் என் கவிதைகளிலே
உயிர்கொண்டு அதிலே
குளிர்காய்கிறாள்
என்றுத் தோன்றுகிறது,

எங்கே,
எப்படி
அவளை
கண்டுபிடிப்பேன்...?

பூவிடம் கேட்டால்
சொல்லிவிடுமா,
அவளையே
முகவரியாய் கொண்ட
பூங்காற்று சொல்லிடுமா...?

வேண்டாம்...வேண்டாம்...
இரண்டுமே
பூவையவளிடம்
பொறாமை கொள்ளும்

பருவகால வானவில்லிடம் கேட்டால்
கோடி வானவில்லும்
கூடிவந்து குடிகொண்ட
அவளின் புருவம்
பார்த்து நாணம் கொள்ளும்...!

எங்கே
தேடுவேன்
எந்தன்
இதயராணியை...?

காத்திருக்கலாமா
யார்தான் அவளென்று...?

இங்கே காத்திருந்து
கரையோரம் சிதறுகிறேன்
அவளுக்கான
தேடல் வரிகளை,

கொஞ்சம் வாசித்து
எந்தன் யாசிப்பை
புரிந்தவளாய்
வருவாளா...?

காத்திருக்கிறேன்
தேவதையே...

விரைவாய் வா
உன் நெஞ்சோடு
என்னை
அணைத்துக்கொள்ள...!

Ajaj Sunilkar Joseph 




செவ்வாய், 3 ஜூலை, 2018

உன்னிடம் தட்சணையாக


உன்னிடம் தட்சணையாக...


ன்னிரு இதழ்களின் 
வன்முறைகளுக்கும் மொழியினால்
உருவம் கொடுத்துப்பார்க்கிறேன்,
அது முத்தம் என்ற பெயரில் 
என்னில் தொடர்வதால்,
கத்தியும்,இரத்தமும் இன்றி
என்னை வீழ்த்தும் யுக்தியை
எனக்கும் கற்றுக்கொடு பெண்ணே...!
உன் விழிவாள் முனையில் 
எனை நிறுத்தி சாய்த்து விடாதே,
நால்விழிகளும் மௌன மொழியை
பேசி காதலாய் மொழிபெயர்ப்போம்,
என் காதல் சாம்ராஜ்யத்தையே
உன்னிடம் தட்சணையாக தருகிறேன்...


Ajai Sunilkar Joseph






By...

வியாழன், 9 ஜூன், 2016

துடித்து மலருதடி...

துடித்து மலருதடி...



ன் நாவின் சத்தம் 
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!










-பிரியமில்லாதவன் 


வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 18 மே, 2016

மீண்டும் மூழ்கடிப்பாளா...!

மீண்டும் மூழ்டிப்பாளா...!









வளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத்  துளிகள்