வியாழன், 31 டிசம்பர், 2015

Happy new year

கடந்த ஆண்டு நீயும்
நானும் எதை சாதித்தோம்...?
புத்தாண்டு வந்தால்
கடந்தவை மறந்து விடுமா...?
கடந்தவை நினைத்து
கலங்க வேண்டாம்...
நமக்கென நாளை
விடியல் காத்திருக்கிறது...
சந்தோஷமாய் வரவேற்போம்...
புத்தாண்டில் புது முடிவு எடுப்போம்...
அதை நிறைவேற்ற புது
முயற்சியும் எடுப்போம்...

-Ajai sunilkar Joseph

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

செல்ல தேவதைக்கு பிறந்தநாள்

என் செல்ல தேவதைக்கு
இன்று பிறந்தநாள்...
அவள் காதோரம் சென்று
மெல்ல சொல்ல வேண்டும்...
வாழ்த்து ஒன்றை...
மணக்கும் மல்லிகையாய்
உன் புன்னகை மலரட்டும்...
என் இதய தேவதையே
உனக்கு என் சின்ன
வாழ்த்துக்கள் செல்லமே...
உன் கன்னத்தில் சின்னதாய்
பிறந்தநாள் பரிசாக
இச்சொன்று தர வேண்டும்...
ஏற்றுக்கொள்ளடி...

-Ajai sunilkar Joseph

வாழ்த்த வார்த்தைகள் இல்லை

பிறந்தநாள் உனக்கு...
வாழ்த்த வார்த்தைகள்
இல்லை எனக்கு...
பரிசுகள் உண்டு உனக்கு...
ஆயிரம் முத்தங்களும்...
என் காதலும்...
என்னுள் நீ வசிக்கும் இதயமும்...
பரிசாக என்னையே எடுத்துக்கொள்...
என்னையே உனக்குத் தந்தேன்...

-Ajai sunilkar Joseph

உனக்கு இன்று பிறந்தநாளா...??

என்னவளே எனக்காய் பிறந்தவளே...
என் உயிரில் கலந்த உனக்கு
இன்று பிறந்தநாளா...?
உன்னை வாழ்த்த என்னிடம்
வார்த்தைகள் இல்லையேடி...
வாழ்த்துக்குப் பதிலாக
பரிசொன்றை தருகிறேனடி...
விரும்பினால் உன்
இதழ்களில் ஏற்றுக்கொள்...
இல்லையென்றால்
எனக்கே திருப்பிக்கொடு...

-Ajai sunilkar Joseph

என்வளுக்கு பிறந்தநாள் பரிசு

வான மேகங்களும் உன்னை வாழ்த்தும்...
மழைத்துளிகளாக...
வண்ணங்களும் உன்னை வாழ்த்தும்...
வானவில்லாக...
கானக பறவைகளும் வந்துனை வாழ்த்தும்...
கீச்ச்....கீச்ச் இசைகளோடு...
காட்டு புஷ்பங்களும் உன்னை வாழ்த்தும்...
காற்றில் வாசமாக...
பூவனமும் உன்னை வாழ்த்தும்...
புன்னகையாக...
வாழ்த்து மழையில் நீ நனைய
என் கவிச்சாரலும் உனை வாழ்த்தும்...
என் இதயத்தையே உனக்கு பரிசாக தந்து...
பிறந்தநாள் பரிசென உனக்குத் தர
என்னிடம் ஏதுமில்லை என்
வெறுமை இதயத்தை தவிர...

-Ajai sunilkar Joseph

வியாழன், 24 டிசம்பர், 2015

துளிர் விடும் காதல்

என் இதயத்தில் அன்பெனும்
விதை விதைத்தாள்...
அது என் காதலாக வளர்ந்தது...
என் காதல் அவளுக்கு பிடிக்காமல்
ஒரு நாள் வெட்டியெறிந்தாள்...
அவள் என் காதலை
வெட்டியெறிந்த கொஞ்ச நாளில்...
என் காதல் மீண்டும்
துளிர் விடுகிறது...

-Ajai sunilkar Joseph

செவ்வாய், 22 டிசம்பர், 2015

என்னவளே சிறந்த கவிதை

எத்தனையோ கவிதைகள்
என் இதயத்தில் இருக்க...
ஒரு கவிதை மட்டும்
என்னால் எழுத முடியவில்லை...
ஆம் பெண்ணே நீதான்
அந்தக் கவிதையே...!
உன்னை படித்து ரசிக்கிறேன்...
எழுதுவதற்கு முடியவில்லை...
நான் ஓவியன் என்றால்
உன்னை வரைந்திருப்பேன்...
சிற்பி என்றால் உன்னை
சிலையாக செதுக்கியிருப்பேன்...
உனக்கு காதலன் என்பதால்
உன்னை படிக்கத்தான்
என்னால் முடிகிறது...

-Ajai sunilkar Joseph

திங்கள், 21 டிசம்பர், 2015

நினைவில் இருக்குமா...?

நீ எனக்குள்
                 இருப்பதையே
நான் மறந்து
                 விட்டேன்...
ஆம்...
                 தனக்குள் ஒரு
இதயம் இருப்பதும்
                 அதில் நினைவுகள்
இருப்பதும்...
                 எப்போதும் நினைவில்
இருக்குமா...?

-Ajai sunilkar Joseph

அவள் கூந்தலில் ஓர் நாள்

அவளிடம் சிறைவாசம் செய்யும் நான்...
அவள் கூந்தலின் பூ வாசம் கண்டு...
அவளுக்காக வனவாசம் செய்து...
வீசும் காற்றுதனில் மகரந்தமாகி...
அவள் வீட்டு பூந்தோட்டம் சேர்ந்து...
அவள் விரும்பும் பூச்செடிதனில்...
அவளுக்காக மொட்டாய் மலர்ந்தேன்...
மங்கையவள் அருகினில் வந்தாள்...
மலரை பறித்து கூந்தலில் சூடினாள்...
அவளிடம் சிறைவாசம் செய்வதை விட...
அவள் கூந்தலில் ஓர் நாள்
வாழ்ந்து மடிந்தாலே போதும்...

-Ajai sunilkar Joseph

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

மீண்டும் திறந்த இமைகள்

என்னவளே...
                         உன்னைப் பார்த்த என்
கண்கள் வேறு யாரையும்
பார்க்க வேண்டாம் என்று...
என் இமைகளை பூட்டியே
வைத்திருந்தேன்...
ஆனால்...
                   என் இதயத்தின் ஏக்கத்தால்...
உன்னைப் பார்க்க என்
இமைகளை மீண்டும் 
திறந்தே வைத்திருக்கிறேன்....

-Ajai sunilkar Joseph

பெண்ணொருத்தி கண்ணிரெண்டில் தொடர்ந்த காதல்

பெண்ணொருத்திக் கண்டு...
அவள் கண்ணிரண்டை கண்டு...
அவள் கண்ணிரெண்டில் கவிழ்ந்து...
மங்கையவள் மனமதில் மயங்கி...
கன்னியவள் காதலில் மடிந்தேன்...
மடிந்ததும் இதயம் இதமாய் துடிக்க...
அவள் நினைவோ என்னில் அதிகமாக...
கட்டி விட்டேன் காதல் கோட்டையொன்றை...
கட்டிய காதல் கோட்டைதனில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் பல தந்து யுத்தங்கள்
செய்கிறாள் என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்வேன் மொத்தத்தில்...

-Ajai sunilkar Joseph

என்னை விரும்பினதும் வெறுத்ததும் நீதான்

என்னை யாரும்   

விரும்பினதில்லை...

அதற்காக யாரும்       

வெறுத்ததுமில்லை...

என்னை விரும்பினதும்...

என்னை வெறுத்ததும்...

நீ மட்டும்தான் உயிரே...

-Ajai sunilkar Joseph

சனி, 19 டிசம்பர், 2015

பார்க்க விருப்பமில்லை

என் விழிகளால்
பார்க்க விருப்பமில்லை...
எதிரில் யாரைப்
பார்த்தாலும் என்
விழிகள் உன்னை
மட்டுமே தேடுகிறது...
-Ajai sunilkar Joseph

வெள்ளி, 18 டிசம்பர், 2015

பெண் படைத்த மழலை கவிதை

பெண் படைத்தாள்
மழலை என்றொருக் கவிதை...
அந்த கவிதை படைத்தது
அம்மா என்றொருக் கவிதை...
அம்மா என்ற கவிதை
புன்னகையுடன் படைத்தது
மழலை நெற்றியில்
முத்தம் என்றொருக் கவிதை...

-Ajai sunilkar Joseph

காரணமின்றி காதல்

சொல்லிக் கொள்ள
சொந்தங்கள் இருந்தும்...
பாசம் வைக்க
பந்தங்கள் இருந்தும்...
நட்புக்காக நண்பர்கள்
இருந்தும்...
காரணமின்றி காதல்
கொண்டேன்...
தேவதையே உன்னிடம்....

-Ajai sunilkar Joseph

உனக்கு நான் இருக்கிறேன்

உனக்கு ஆறுதல்
                 சொல்ல நினைக்கிறேன்...
ஆனால்...
                 என்னை அறியாமலே
அழுகிறேன்...
                  உன் கண்ணீரை
துடைக்கவா...?
                  என் கண்ணீரை
துடைக்கவா...?
                   என் உயிரே
நீ அழுதால்...
                   நான் உடைந்து
போவேன் என்பதை
                   மறந்து அழுகிறாயா...?
முழுவதுமாய் அழு...
                   உனக்கு நான்
இருக்கிறேன்...
                   இதை மறந்து விடாதே...
By.....Ajai Sunilkar Joseph

புதன், 16 டிசம்பர், 2015

சிறந்த தலைவன்

இலவசம் ஏனோ
இவன் வசம் இல்லை...
இவன் கண்களில் ஏனோ
தூக்கமும் இல்லை...
காரணம் தானோ
சுயநலம் இல்லை...
இவன் குருதி கொதிப்பதோ
பொதுநலன் கருதி...
குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...
நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...
மக்கள் பஞ்சம் தீர்க்க
இவன் நெஞ்சம் கதறும்...
இவனே சிறந்த தலைவன்...

By......Ajai Sunilkar Joseph