லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
புதன், 16 நவம்பர், 2016
கிடைத்தாள் புதிய தோழி....
திங்கள், 14 மார்ச், 2016
மீண்டும் நட்பால் இணைந்தோம்....
பள்ளிக்கூட பருவத்திலே
அறிமுகமான முதலாம் நாள்...
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசாங்கில்லா பாசத்தால்...
துவங்கினதே இந்த நட்பு...
இன்றும் முடிவில்லாததே நட்பு...
கல்வி முடிந்ததும் பிரிந்தோம்
கல்லூரி காலமும் தொடர்ந்தோம்...
மீண்டும் மறுமுறை பிரிந்தோம்...
பணிகளும் வந்தது மறந்தோம்...
அறிமுகமானதே இணையம்...
மீண்டும் நட்பால் இணைந்தோம்...
இங்கே மீண்டும் நட்பின் உதயம்...
இணைந்ததே நம் நட்பில் இதயம்...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
புதன், 13 ஜனவரி, 2016
நட்பே மறந்து போனதாலோ...?
நட்பே நீதான் எனக்கு
உணர்வுகளாய் இருந்தாய்...
நீ என்னை பிரிந்ததால்
உயிர் இருந்தும் நடமாடும்
சவமாய் நானிங்கு தனியே
அலைந்து திரிகிறேன்...
எனக்குள் உணர்வுகள் யாவும்
மரத்துப் போனதே நட்பே
நீ என்னை மறந்து போனதாலோ...?
-Ajai Sunilkar Joseph
வெள்ளி, 8 ஜனவரி, 2016
நட்பு என்பது உறவல்ல
எத்தனை உறவுகள்
நம்மை விட்டு பிரிந்தாலும்...
வலிக்காத இதயம் ஏன்
வலிக்கிறது ஒரு நட்பின்
பிரிவின்போது...?
ஏனென்றால் நட்பு
என்பது உறவல்ல...
இரத்தத்தில் ஊற்றெடுத்து
உயிரோடு உறவாடும்
உண்மையான உணர்வுகள்...
-Ajai sunilkar Joseph
