வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அவள் அறிமுகம் 3

அவள் அறிமுகம் 3


அவளது முந்தைய
அறிமுகங்கள்
👇👇👇👇👇👇👇👇
அவள் அறிமுகம் 1,
அவள் அறிமுகம் 2


ன் உலகமே இருண்டு போனதே

                    தெய்வத் திருமகள் அவளது

திருமுகம் காணாத ஓர் நாளில்,

                    நாளை வருவாளா வெளிச்சப்

புன்னகையை பளிச்சென்று வீச,

                    காத்திருக்கிறேன் கண்மணிக்காக

கானலாய் மறைந்து போகின்றாள்...!

                    அவள் இதயக் கள்வன் நானிருக்க

யாரோ ஒருவருக்காய் அவள்

                    பூமுகத்தை மறைக்கின்றாள்...!

அவள் எங்கு சென்றாலும்

                    தேடி போவேன் என்றாலும்...!

என்னைத் தேவையே இல்லையென்று

                    வாட்டி வதைக்கின்றாள்...!

பூங்காற்றாய் அவளைத்

                    தேடிப் போகிறேன்...

வார்த்தைத் தீயள்ளி என்மேல் வீசுகிறாள்...!

                    காதல் ரோஜாவை கையில் ஏந்தி

ஏந்திழை அவளின் வருகைக்காக

                    ஏகாந்தமாய் காத்திருக்கிறேன்...

ஆயிரமாயிம் கனவுகளுடனும்,

                    அதிசயமான அவள் நினைவுகளுடனும்...

Ajai Sunilkar Joseph 











12 கருத்துகள்:

  1. காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி

    பதிலளிநீக்கு
  2. அழகான வரிகள். ரசித்தேன்.

    உங்கள் வலைப்பதிவில் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணையுங்கள்.

    உங்கள் வலைப்பதிவின் அகலத்தை 1200 பிக்சல் அளவுக்கு மட்டுபடுத்தவும்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே..

      ஆட்சென்ஸ் சேவையால் என்ன நன்மை...?

      பிக்சல் அளவை மட்டுப்படுத்த தெரியவில்லை...

      நீக்கு
  3. நினைவுகள் சங்கீதமாகட்டும்...

    பதிலளிநீக்கு
  4. காத்திருந்த காதல் சீக்கிரமே கனியும்!

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!