ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

கன்னக்குழியில் வீழ்த்தி யுத்தமொன்று செய்கிறாள்...

கன்னக்குழியில் வீழ்த்தி 
யுத்தமொன்று செய்கிறாள்...


பெண்ணொருத்திக் கண்டு,
அவளின் விழிகள் கண்டு,
சிரிக்கும் கன்னம் இரண்டு,
அதிலே குழிகள் கண்டு,
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்து விட்ட நானும்,
எழுந்து விட நினைத்தும்,
மங்கை மனதில் மயங்கி,
கன்னியின் காதலில் மடிந்தேன்...
அவளோ காதல் தந்தாள்,
என் இதயம் இதமாய் துடிக்க,
அவள் நினைவோ என்னை ஆள,
கட்டி விட்டேன் காதல் கோட்டை...
கட்டிவிட்ட காதல் கோட்டையில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் தந்து யுத்தங்கள் செய்கிறாள் 
என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்கிறேன் மொத்தத்தில்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி



2 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!