வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி...
என்னைத் தனிமையில்
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து,
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...
புத்தகத்தில் கவியெழுதி...
என்னைத் தனிமையில்
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து,
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
சோக காவியம்கூட அருமையாகத்தான் இருக்கிறது நண்பரே
பதிலளிநீக்குஏன் சோகம்!! வரிகள் அருமை!!!
பதிலளிநீக்குசோகத்திலிருந்து எப்போது மீளப்போகின்றீர்கள் வரிகள் நன்று
பதிலளிநீக்குசோகம்.... :(
பதிலளிநீக்குவிரைவில் மீள வாழ்த்துகள்.
அருமை...
பதிலளிநீக்குஎழுத்துருவை இன்னும் கொஞ்சம் பெருசாக்கலாமே சகோ
அருமை.... எழுத்து இன்னும் கொஞ்சம் பெரியதாக இருத்தல் நல்லது... செய்யலாமே.
பதிலளிநீக்கு