வியாழன், 5 அக்டோபர், 2017

தேவதையை தேடி வலிகள் வந்ததோ கோடி...

தேவதையை தேடி 
வலிகள் வந்ததோ கோடி...


கற்பனைகள் சேர்த்து கவிதைகள் 
சில எழுதியிருந்தாலும்...
சொந்த வலிகளை கவிதைகளாய் 
வாசிக்க வேண்டுமென சிறு 
ஆசைக்காக மட்டுமே வாசிக்கிறேன்...


காதல் சொல்ல ஓடி வந்தேன்,
தேவதை உன்னையே நாடி வந்தேன்...
பொய்கள் சேர்த்து நீ கட்டிய காதல்
உணர்ந்த பின் என்னிதயத்தில் மோதல்...
கலங்கத் தெரியா கண்ணில் கலகம்,
நீதானடி எந்தன் உலகம்...
உண்மைத் தெரிந்து உதறிய பின்னே,
என்னிதயம் கதறிய வார்த்தைகள் எங்கே...?
சொல்லியழ நாதியில்லை 
சிதறி விட்டேன் கவிதைகளாய்,
என்னைத் தழுவும் நினைவுகளை 
சொல்லி விட்டேன் அலைகளிடம்...
என்னால் தாங்க முடியா பாரங்களை
விட்டெறிந்தேன் தூரங்களாய்...
மீண்டும் உறுத்துது பெண்ணே உள்ளம்,
என்னிடமே ஏன் கள்ளம்...!
என்னைக் கொள்ளையிட்டாய் உறவே
நெஞ்சில் கொள்ளியிட்டாய் மறவேன்...
காதல் என்றால் இதுவோ...?
என்னை மாற்றம் செய்வது எதுவோ...?
மதுவைத் தொட்டால் நானும் மதியிழந்து போவேன்,
மாதுவே உன்னால் நானும் கதியிழந்து போனேன்...
குற்றமில்லா உன்னை உதறி விட்டு போனேன்,
நித்தம் உனை நினைத்து கதறி விட்டு போனேன்...
உயிராய் உன்னிடம் உறவாட
என் வலிகளை விட்டே போகிறேன்...

காணொளி







6 கருத்துகள்:

  1. வணக்கம்,

    கவிதை அருமை...

    உண்மை வலை என குறிப்பிட்டதால், உங்களின் வயதையும் காதலையும் கடந்து வந்தவன் என்ற உரிமையில்...

    " வாழ்க்கையில் காதலும் கடந்து போகும் !... "

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....
      உமது தளத்திற்கு விரைவில் வருகிறேன்...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!