புதன், 10 ஜனவரி, 2018

என் காதலின் வேரடி...

என் காதலின் வேரடி...


விட்டு விட்டுத் 
துடிக்கும் என் நெஞ்சம் 
விட்டெறிந்த உன்னை
விடாமல் நினைக்குதடி...
நள்ளிரவு நேரம்
கிள்ளியெழச் செய்து,
கண்ணில் கொஞ்சம்
காதலைக் கெஞ்சுதடி...
இதயத் துடிப்பினை நிறுத்தி
மூச்சு முட்டச் செய்யுதடி,
புரண்டுருண்டு படுத்தால்
என்னை புரட்டிப் போட்டு கொல்லுதடி...
நான் தந்த வலியோ 
என்னை நரகத்தில் தள்ளுதடி,
கத்தியெறிந்த என் நாவோ
புத்தி கெட்டுப் போனதடி...
உன் காலடி நான் கண்டால்
என் காதலின் வேரடியில்
சரணடைந்து போவேன்டி...

காணொளி


Ajai sunilkar Joaeph


6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!