கரையோரம் சிதறிய கவிதைகள்
அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!
அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,
எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...
என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!
எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!
காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!
கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!
என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!
சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!
துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!
அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...
அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!
இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?
அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?
அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!
அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,
எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...
என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!
எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!
காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!
கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!
என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!
சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!
துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!
அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...
அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!
இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?
அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?
By...Ajai Sunilkar Joseph
காணொளி
காதல் நிரம்பிய கவிதை தொகுப்பு அருமை நண்பரே.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
நீக்குநன்றி நட்பே...!!!
நண்பர் திரு.வலிப்போக்கன் இதற்கு வழி சொல்வார் நண்பரே
பதிலளிநீக்குஹ ஹா சரிதான் நண்பரே ...
நீக்குஅவள் வந்தாலே போதும்
பதிலளிநீக்குவலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?
ஆகா!
அருமை!!
நன்றி நண்பரே நன்றி ..!!!
நீக்குவளமான வரிகள் பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு