மௌன தண்டனைகள் வேண்டாம்...
உனது கண்களால்
என்னை கைது செய்து,என் இதயத்திலே நினைவுகள்
எனும் சிறைச்சாலை கட்டி,
என்னை என்னுள்ளே
அடைத்துப் போனவளே...
தயவாய் என்னை
விடுதலை செய்யாதே...
என்னுள்ளே கைதியான நான்
உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
உன்னிடமே ஆயுள் கைதியாக
ஆசைப்படுகிறேன்...
உன் மௌன தண்டனைகள் வேண்டாம்...
வார்த்தைகளால் கொஞ்சும்
தண்டனைகள் போதும்...
வாவா பெண்ணே
கொஞ்சும் தண்டனைகள்
கொஞ்சமாகத் தந்து விடு...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
நல்லது... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே ...!!
நீக்கு
பதிலளிநீக்கு"என்னுள்ளே கைதியான நான்
உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
உன்னிடமே ஆயுள் கைதியாக
ஆசைப்படுகிறேன்..." என்ற
வரிகளுக்குப் பாராட்டுகள்!
நன்றி நண்பரே ...
நீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும்...
நன்று. நல்லதே நடக்கட்டும்....
பதிலளிநீக்கு