விழியழகே...!
கோடி வானவில்
கூடி வந்து
உன் கண்ணுக்கு
கருமை ஆனதோ...!
By...Ajai Sunilkar Joseph
மின்னழுத்தம்
உன் விழிகளின்
உயர்மின்னழுத்தத்தால்
என் இதயத்தைக்
குடிக்கும் மின்சாரம்
நீயடி...!
By...Ajai Sunilkar Joseph
வெள்ளைப்பூவே...!
பார்வையால்
வெளிச்சம் வீசி
என்னைக் கொள்ளைக்கொண்ட
வெள்ளைப்பூவே...!
உன் செவ்வாய் மலர்ந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசி விடு...
பார்வையால்
வெளிச்சம் வீசி
என்னைக் கொள்ளைக்கொண்ட
வெள்ளைப்பூவே...!
உன் செவ்வாய் மலர்ந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசி விடு...
By...Ajai Sunilkar Joseph
என்னை அபகரித்த நினைவுகள்
எந்தன் இதயத்தை
அபகரிக்கும் உந்தன்
நினைவுகளை தட்டியெறிந்துப்
பார்க்கிறேன்,
ஒவ்வொன்றும்
இரண்டிரண்டாய்
என்னைப் புரட்டிப்போட்டுக்
கொல்லுதடி...!
By...Ajai Sunilkar Joseph
அகலாய் அவள் விழிகள்
அகலும் அகலாய்
அவளிருக்க,
அவளில் அகலாய்
அவள் விழியிருக்க,
விழுந்தேன் அவளிடம்
எண்ணெயாய்,
காதல் தீபம் ஏற்றிவிட...!
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
மிகவும் அருமையாக வடிவமைத்துள்ளீர்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குஅருமையா இருக்கு கவிதைகள் !
பதிலளிநீக்கு