வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

அகம் தேடிய அகதின் கண்ணிமைகளின் 
சிறகடிப்பில் 
என்னைச் சிறைபிடித்தாய்,

இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் 
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,

தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி 
உன் விழிகளில் 
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,

உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,

இல்லையேல் உன் மனதில் 
என்னைக் கைது செய்து

ஆயுள்கைதியாய் அடைத்து விடு...


Video


6 கருத்துகள்:

  1. அகம் தேடி அறிந்தவர் எவரும் சிறை வேண்டி நிற்பாரோ?

    பதிலளிநீக்கு
  2. காதல் குடியுரிமையா
    புதிய சொல்லாடல்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!