கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

மனதில் நினைப்பாளா...?

மனதில் நினைப்பாளா...?

னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க,
மண்ணோடு புதைந்து விட்டேன்...
மண்ணில் கனவோடு,
மனதில் நினைவோடு,
மரணத்தை தழுவினால்
மனதில் நினைப்பாளா...?
மண்மீது உதிர்வேனா...?


By...Ajai Sunilkar Joseph



செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 7 மே, 2016

பேனாவின் முத்தங்கள்

பேனாவின் முத்தங்கள்


வெள்ளை காகிதங்களே
              எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
              எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
              துளிகள் ஆனதோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்







(பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும்
பணிகள் தீவிரமாய் நடப்பதால்
வலையுலக சொந்தங்களே உங்கள் 
பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து
 கருத்துரை இட என்னால் முடியவில்லை 
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

செவ்வாய், 3 மே, 2016

துளியளவு நேசம்

துளியளவு நேசம்...


துளியளவு நேசம் தந்தாள்...
கடலளவு சுவாசம் கொண்டேன்...
இதயக் கடலின் நினைவலையால்
நொடிக்கு ஒருமுறை மோதுகிறாள்...
கரையாய் இருக்கும் என்னை 
கரைத்து அவளில் சேர்த்திடத்தானோ...!
கரைகிறேன் நான் மெல்ல மெல்ல...
அவளுடன் சேர்ந்து வாழ்ந்திடவே...!



Ajai Sunilkar Joseph 
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 30 ஏப்ரல், 2016

என்னில் சந்தோஷத் தோரணம்

என்னில் சந்தோஷத் தோரணம் 





எனக்குத் தாரமாகும்
                     வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு 
                    தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
                    என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
                    எனக்குத் தாரமாக 
வந்திடத்தானே தவம்
                    கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
                    தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
                    கிடைத்த காரணம் தானே...!








Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்




சனி, 23 ஏப்ரல், 2016

கோபம் வேண்டாம் கண்மணியே...

நுரைகள் பொங்கும்

                         அலைகள் கூட

கரையில் கொஞ்சம்

                         மோதிச் செல்லும்...

கரைகள் என்ன

                         கோபித்தா கொள்ளும்...

கரையில் உன்னிடம்

                         நேசம் வைத்த

எந்தன் சுவாசம்

                         உன்னைக் கொஞ்சம்

கொஞ்சும் போது...

                         மெல்லமாய் உன்னைத்

தீண்டிச் சென்றால்...

                         கோபம் வேண்டாம்

காதல் கண்மணியே...


Ajai Sunilkar Joseph பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வலையுலக நட்பர்களே நான் ஒரு
தொடர்கதை எழுத துவங்கியுள்ளேன்....
ஆனால் எனக்கு கதை எழுதியே பழக்கமில்லை...
இதிலே தொடர்கதை வேறேயா...!
வருகிற நாட்களில் தொடர்கதையை
இதே தளத்தில் பகிர்ந்து கொள்ள
சிறிய ஆவலாய் உள்ளேன்....
கதையை பகிரலாமா என்று உங்கள்
கருத்துகளை எனக்கு தாருங்கள் நட்பர்களே...

(கதை ஒரு உண்மை சம்பவம்
ஆனால் கற்பனைகள் சேர்க்கப்பட்டது)

புதன், 20 ஏப்ரல், 2016

அகதியான இதயத்தில் அவளே கைதி...

கண்ணால் என்னை கடத்தி

சென்றாள் மெல்ல ஒருத்தி...

காதல் வசியம் செய்து

இதயம் எடுத்தாள் கொய்து...

என்னிதயத்தில் அவளே நின்று

கட்டினாள் காதல் சிறையொன்று...

இதயம் அவளிடம் அகதியாய்

அதனுள் அவளே கைதியாய்...

இரவும் பகலும் காவல்

காத்தே செய்தேன் காதல்...

நித்தம் நித்தம் நினைவுகள்

தந்தாள் எந்தன் நெஞ்சுக்குள்...

கண்ணால் காதல் தருகிறாள்

இதயத்தில் அடைந்து கிடக்கிறாள்...



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விழிகள் தந்த வினாத்தாள்...

காதல் தேர்வினில் அவள்

விழிகள் தந்த வினாத்தாளுக்கு...

அவளின் மனத்தாளினில் விடைகள்

வரைந்தேன் வார்த்தை வரிகளாக...

அவள் விழிகள் தந்த வினாத்தாளுக்கு

அவள் மனமே விடைத்தாள்

ஆனது என் குற்றமா...?

ஏதோ கிறுக்கி விட்டேன்

என்று சற்றும் யோசிக்காமல்...

என்னை ஏசிச் சென்றாள்...

என் காதலுக்கு அவள்

மதிப்பெண் தான் தருவாளோ...!

இல்லை என் காதலை

மதிக்காத பெண்ணாய் ஆவாளோ...!

எதிர் பார்த்து நிற்கிறேன்...

ஏமாற்றம் தான் தருவாளோ...!

என்னில் மாற்றம்தான் தருவாளோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2016

மின்னல் விழி கொண்டவளா...!

கண்கள் கூசும் மின்னலா...

மின்னல் வீசும் கண்களா...

உன் பார்வை பட்டது என்னிலா...

என் பார்வை போனது உன்னிலா...

உன்னை மட்டும் பார்க்கிறேன்...

என்னை நானே மறக்கிறேன்...

என் கண்கள் மூட மறுக்கிறேன்...

உன்னை கனவில் காண துடிக்கிறேன்...

உறக்கம் இல்லை கண்ணிலே...

உன்னை பார்க்கிறேன் கனவிலே...

நீதான் என்மன வானிலே...

நான் கனவாய் காணும் பெண்ணிலா...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 16 ஏப்ரல், 2016

என்னுடலோ சலனமின்றி...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்

சொல்ல முடியாமல் தவிக்கிறேன்...

ஏந்திழையின் விழி இரண்டில்

ஏக்கத்தின் கண்ணீர் பார்க்கிறேன்...

ஏதேனும் சொல்ல நானும்

எத்தனமாய் நிற்கிறேன்...

ஏனோ என்னால் முடியாமல்

ஏக்கம் நிறைந்து திகைக்கிறேன்...

என்னவளின் அருகில் நானும்

நின்று கொண்டே அழுகிறேன்...

ஏனோ தெரியவில்லை என்

கண்ணீர் மண்ணில் விழவில்லை...

என்னுடலோ சலனமின்றி

சவமாய் அவளருகில்...

என்னவளின் அழுகையோ என்னருகில்...

என்னுயிரோ தவிக்குதே அவளருகில்...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

சலனமில்லா கைப்பேசி...

காத்திருந்து பேசிய

                     என் கைப்பேசிக்கும்

அவள் அழைப்பு ஒலி

                     சலித்துப் போய் விட்டதோ...!

அவள் அழைப்பின் ஒலி

                     கேட்க காத்திருக்கிறேன்...

ஒரு சலனமும் இல்லையே...

                     என் கைப்பேசியில்...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வாடகை கொடுக்கிறோமா...!

வாடகை வீடாய்

                            இந்த பூமி...

கொஞ்ச நாட்கள்

                            வாழ்ந்து விட்டுப்

போகவே இந்த

                            வாடகை பூமியில்

வந்துள்ளோம்...

                            அன்பெனும் வாடகை

கொடுத்து விட்டால்

                           சந்தோஷம் என்ற

வீட்டில் நிம்மதியாக

                          வாழலாம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 8 மார்ச், 2016

மண்ணை விட்டு மறைந்தாளோ...!

கண்ணில் கண்ட
                  காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
                  உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
                  நேரமும் இதுதானோ...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
                  என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
                  நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
                  காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
                  காவல் காப்பேனே...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 2 மார்ச், 2016

பூஞ்சோலைக்குள் பூ வைக்கும் பூவை...

பூ வைக்கும் பூவைக்காக

பூத்திருந்து காத்திருந்தேன்

பூஞ்சோலைக்குள் நான்...

பூஞ்சேலை கட்டி வந்த

பூலோக தேவதை பூந்தண்டில்

பூத்திருந்த என்னை அவள்

பூங்கூந்தலில் ஏந்தி சென்றாள்...

பூவை கூந்தலில் ஓர் நாள்...

பூவாசம் செய்ததே சந்தோஷம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 1 மார்ச், 2016

விவசாயி காதலோ....!

நட்டு வச்ச நாத்தெல்லாம்

              துளிர் விட்டு வளருதடி...

நாத்து நட்ட என் நெஞ்சம்

              உன் நெனப்புல வளருதடி...

பசிச்சாலும் தவிச்சாலும்

              உன் நெனப்பே போதுமடி...

உன் நெஞ்சுல நான் வெதச்ச

              என் காதல் எங்க புள்ள...

பூத்திருந்து வெளஞ்சிடிச்சோ

              காத்திருந்து அறுத்தாயோ...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

முத்தழகு மழலை.....

பல துளி உதிரம்

                  சிறு துளியாகி...

கருப்பை சென்று...

                  கர்ப்பம் கொண்டு...

மாதங்கள் சில

                  மூச்சடக்கி பெத்தெடுத்த

முத்தழகு நீயோ...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்....

மத்தாப்பூ சிரிப்புடனே...

               மல்லிப்பூ மணத்துடனே...

என் மார்பில் சாய்ந்திடவே...

                ஏக்கங் கொண்ட பூங்கொடியே...

சாய்ந்து விட்டேன் மஞ்சத்தில்...

                  சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் மலரொன்று....

பெண்ணின் கூந்தலில்

                 உதிர்ந்த மலரொன்று

மண்ணிடம் யாசித்தது...

                  உன்னில் விதைகிறேன்

நீயாவது என்னை

                    பிளைக்க விடு என்று...

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

புதன், 17 பிப்ரவரி, 2016

உன்னைத் தேடி...

தேடி நான் கண்ட

            பூலோக தேவதை நீயடி...

தொலையாத உன்னை

            நான் ஏன் தேடுகிறேன்...

புரியவில்லையா...!

            உன் விழிகளை என்

விழிகள் பார்த்த நொடியிலேயே

            என்னை உன்னுள்

தொலைத்து விட்டேன்...

            உன்னைத் தேடி

என்னை கண்டடையவே

            உன்னைத் தேடுகிறேன்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

திங்கள், 15 பிப்ரவரி, 2016

உனக்காக வாழ வேண்டும்...

நூறு ஆண்டுகள்

வாழ வேண்டும்

என்ற ஆசை எனக்கு

துளியளவும் இல்லை...

அன்பான உனக்காக

ஒரு நாளாவது வாழ

வேண்டும் உயிரே...

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com