தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஏப்ரல், 2016

மஞ்சரி மற்றும் மாலினி - 1

அன்பான வலையுலக நண்பர்களுக்கு
பிரியமில்லாதவனின் பிரியமான வணக்கங்கள்...
முதன் முதலாய் முயற்சி செய்து
இந்த கதையை துவங்கியுள்ளேன்...
கதையை படித்து விட்டு தங்கள்
கருத்துகளை  சொல்லுங்கள்...

மஞ்சரி மற்றும் மாலினி - 1



அடியே மாலினி விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆவுதே சீக்கிரம் எந்திரிடி என்று அவசரமாய் 
கத்தினாள் மாலினியின் தாய் மஞ்சரி...


ஆம் மாலினி வேறு யாரும் அல்ல
இந்தக் கதையின் நாயகிதான்...


ஏன் தன் மகளை அவசரமாய் கூப்பிடுகிறாள்
என்று அப்புறமாக சொல்கிறேன்...
முதல் மஞ்சரியை குறித்து பார்ப்போம்...

அந்த ஊரில் முத்தைய்யா என்று ஒரு
பணக்காரர் இருந்தார்...

அவரை காதலித்தவர் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு திருமணம் செய்து 
முத்தைய்யாவை பிரிந்து விட்டார்...

இது முத்தைய்யாவுக்கு பெரிய 
ஏமாற்றமாக இருந்தது...
இதிலிருந்து முத்தைய்யாவுக்கு 
பெண்கள் எனெறாலே வெறுப்பு...
ஆனால்....
                  முத்தைய்யாவின் பெற்றோரின் 
வற்புறுத்தலின் பெயரில் முத்தைய்யாவும் 
திருமணம் செய்து கொண்டார்...

ஆனால் தன் மனைவி செல்வியை நன்றாகவே அடிப்பார் உதைப்பார் 
கொடுமை படுத்துவார்...

முத்தைய்யாவின் கொடுமை 
எல்லாம் தாங்கிய செல்வி 
பெற்றெடுத்த அழகு சிப்பிதான் மஞ்சரி...

முத்தைய்யாவுக்கு பெண்கள் மேலிருந்த
வெறுப்புதான் என்னமோ மகள் மஞ்சரியின்
மேல் துளியளவும் பாசமில்லாத காரணம்...

தன் மனைவி பெண் பெற்றாள் என்றே
விசேஷமாக சித்திரவதை செய்வார்...

முத்தைய்யா என்றால் அவரது ஜாதியே
அவருக்கு கட்டுப்பட்டு நிற்கும்...

அவளவு ஜாதிப் பிரியர் இல்லை வெறியர்...

எந்த ஜாதி என்று கேட்க வேண்டாம்...

அது சாணி போல நாறும்...

அதனால் கதையை மட்டும் பார்ப்போம்...

மஞ்சரிக்கோ மருத்துவர் ஆக வேண்டும்
என்பதே கனவாய் இருந்தது...

அதனால்தான் அவள் நினைத்தது கனவாய் கலைந்ததோ...!

தன் மகள் +2 வில் அதிக மதிப்பெண் 
பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் அவளை மேலே படிக்க 
விடாமலே இருந்தார் முத்தைய்யா...

அவரை ஊரே பணக்காரன் என்று சொன்னாலும்...

தன் மகள் வாழ்க்கையில் கஞ்சனாகவே இருந்து
மஞ்சரியின் படிப்பில் மண் அள்ளியே போட்டார்...

காரணம் பெண் என்றாலே அவருக்கு பிடிக்காதாம்...

அப்போ எதற்கு பெண் பெற்றாய் என்று கேட்டால்
அன்று மனைவி செல்விக்கு கொடுமையும்
சித்திரவதையும் தான் மிஞ்சும்...

பெண் பெற்றாள் செல்வி அதனால்தான்
மகளுக்கு இல்லை கல்வி...

மஞ்சரியோ தன் தாய் படும் கொடுமைகளை
பார்த்து மேலே படிக்க வேண்டும் என்ற
எண்ணத்தையும் விட்டு விட்டாள்...

படிக்க ஒருத் தடையா என்று நினைத்து நினைத்து
தன் உள்ளத்தையே உடைத்து விட்டாள்...

அன்பான மஞ்சரியின் மனமோ அகதி போல
சுற்றியே வந்தது தன் ஆசை வைத்த மருத்துவ படிப்பின் மேலே...

மஞ்சரியும் தன் படிப்பை மறந்து இல்லை இல்லை
அந்த எண்ணங்களை மனதினுள்ளே புதையலாய் புதைத்து விட்டாள்...
                                                   (தொடரும்...)