வியாழன், 31 டிசம்பர், 2015

Happy new year

கடந்த ஆண்டு நீயும்
நானும் எதை சாதித்தோம்...?
புத்தாண்டு வந்தால்
கடந்தவை மறந்து விடுமா...?
கடந்தவை நினைத்து
கலங்க வேண்டாம்...
நமக்கென நாளை
விடியல் காத்திருக்கிறது...
சந்தோஷமாய் வரவேற்போம்...
புத்தாண்டில் புது முடிவு எடுப்போம்...
அதை நிறைவேற்ற புது
முயற்சியும் எடுப்போம்...

-Ajai sunilkar Joseph

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

செல்ல தேவதைக்கு பிறந்தநாள்

என் செல்ல தேவதைக்கு
இன்று பிறந்தநாள்...
அவள் காதோரம் சென்று
மெல்ல சொல்ல வேண்டும்...
வாழ்த்து ஒன்றை...
மணக்கும் மல்லிகையாய்
உன் புன்னகை மலரட்டும்...
என் இதய தேவதையே
உனக்கு என் சின்ன
வாழ்த்துக்கள் செல்லமே...
உன் கன்னத்தில் சின்னதாய்
பிறந்தநாள் பரிசாக
இச்சொன்று தர வேண்டும்...
ஏற்றுக்கொள்ளடி...

-Ajai sunilkar Joseph

வாழ்த்த வார்த்தைகள் இல்லை

பிறந்தநாள் உனக்கு...
வாழ்த்த வார்த்தைகள்
இல்லை எனக்கு...
பரிசுகள் உண்டு உனக்கு...
ஆயிரம் முத்தங்களும்...
என் காதலும்...
என்னுள் நீ வசிக்கும் இதயமும்...
பரிசாக என்னையே எடுத்துக்கொள்...
என்னையே உனக்குத் தந்தேன்...

-Ajai sunilkar Joseph

உனக்கு இன்று பிறந்தநாளா...??

என்னவளே எனக்காய் பிறந்தவளே...
என் உயிரில் கலந்த உனக்கு
இன்று பிறந்தநாளா...?
உன்னை வாழ்த்த என்னிடம்
வார்த்தைகள் இல்லையேடி...
வாழ்த்துக்குப் பதிலாக
பரிசொன்றை தருகிறேனடி...
விரும்பினால் உன்
இதழ்களில் ஏற்றுக்கொள்...
இல்லையென்றால்
எனக்கே திருப்பிக்கொடு...

-Ajai sunilkar Joseph

என்வளுக்கு பிறந்தநாள் பரிசு

வான மேகங்களும் உன்னை வாழ்த்தும்...
மழைத்துளிகளாக...
வண்ணங்களும் உன்னை வாழ்த்தும்...
வானவில்லாக...
கானக பறவைகளும் வந்துனை வாழ்த்தும்...
கீச்ச்....கீச்ச் இசைகளோடு...
காட்டு புஷ்பங்களும் உன்னை வாழ்த்தும்...
காற்றில் வாசமாக...
பூவனமும் உன்னை வாழ்த்தும்...
புன்னகையாக...
வாழ்த்து மழையில் நீ நனைய
என் கவிச்சாரலும் உனை வாழ்த்தும்...
என் இதயத்தையே உனக்கு பரிசாக தந்து...
பிறந்தநாள் பரிசென உனக்குத் தர
என்னிடம் ஏதுமில்லை என்
வெறுமை இதயத்தை தவிர...

-Ajai sunilkar Joseph

வியாழன், 24 டிசம்பர், 2015

துளிர் விடும் காதல்

என் இதயத்தில் அன்பெனும்
விதை விதைத்தாள்...
அது என் காதலாக வளர்ந்தது...
என் காதல் அவளுக்கு பிடிக்காமல்
ஒரு நாள் வெட்டியெறிந்தாள்...
அவள் என் காதலை
வெட்டியெறிந்த கொஞ்ச நாளில்...
என் காதல் மீண்டும்
துளிர் விடுகிறது...

-Ajai sunilkar Joseph

செவ்வாய், 22 டிசம்பர், 2015

என்னவளே சிறந்த கவிதை

எத்தனையோ கவிதைகள்
என் இதயத்தில் இருக்க...
ஒரு கவிதை மட்டும்
என்னால் எழுத முடியவில்லை...
ஆம் பெண்ணே நீதான்
அந்தக் கவிதையே...!
உன்னை படித்து ரசிக்கிறேன்...
எழுதுவதற்கு முடியவில்லை...
நான் ஓவியன் என்றால்
உன்னை வரைந்திருப்பேன்...
சிற்பி என்றால் உன்னை
சிலையாக செதுக்கியிருப்பேன்...
உனக்கு காதலன் என்பதால்
உன்னை படிக்கத்தான்
என்னால் முடிகிறது...

-Ajai sunilkar Joseph