ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன்னை பிரிந்தால் நானில்லை

என்னை நீ விட்டு விடாதே

என்று உன்னிடம் சொல்ல

எனக்கு உரிமையில்லை...

என்னை நீ விட்டு சென்றால்

என்னுயிரும் என்னை விட்டு

விடும் என்பதை மறவாதே...!

நீ மறந்தாலும் பரவாயில்லை

உன்னை பிரிந்தால் நானுமில்லை...

எனக்கு அகிலமே நீதானே

உன்னை பிரிந்தால்

நானில்லைதானே...!

-Ajai Sunilkar Joseph

வியாழன், 28 ஜனவரி, 2016

ஒரு முறை சுவாசம் கொள்

நீயும் நெருங்கி வந்தாய்...
நானும் நெருங்கி வந்தேன்...
நீயோ விலகி சென்றாய்
நானோ விலகவில்லை...
நிகராக எனது உயிரை
நான் விலகி விட்டேன்...
விலகிய உயிரோ உன்னை
சுற்றியே வருகின்றது...
உன் சுவாசத்திலாவது
சேர்ந்து விடலாம் என்று...
ஒரு முறை சுவாசம் கொள்
நிம்மதியாக விலகி செல்வேன்...

-Ajai Sunilkar Joseph

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

எம்மொழி அது செம்மொழி

செந்தமிழ் நாட்டில் பிறந்து விட்டு...
நம்மொழி செந்தமிழை மறந்து விட்டு...
தமிழை அடி நாக்கில் புதைத்து விட்டு...
ஆங்கிலத்தை நுனிநாக்கில் விதைத்து விட்டு...
நம் தமிழை முற்றிலும் மறந்து விட்டு...
மழலை வாயிலும் ஆங்கிலத்தை நுழைத்து விட்டு...
செந்தமிழை மறைக்கும் தமிழர்களே...
எந்த மொழியினராயினும் வந்து பிழைக்கும்
செந்தமிழ் நாட்டில் தமிழ் பேச நாதியில்லையோ...?
தொலையும் மொழியா நம்மொழி...?
தொலைத்து விட்டால் நானும் நீயும் தமிழரா...?
செம்மொழி பேசிய வாயிலெல்லாம்
செந்தமிழ் புதைந்தேதான் போனதோ...?
வெள்ளையன் விதைத்த ஆங்கிலம்தான் துளிர் விடுதோ...?
துளிர் விடும் மொழியெல்லாம் செந்தமிழை தகர்ப்பதில்லை...
தமிழ் தமிழ் அது என் உயிர் மொழி...
தமிழில்லாமல் நானில்லை...

-அஜய் சுனில்கர் ஜோசப்

காதல் தாகம் தீர்த்த தாரகை

எந்தன் காதல் தாகம் தீர்த்த
தாரகை உந்தன் தனிமை
தாகம் தீர்க்க எந்தன் கண்ணீர்
தாரைகள் போதுமோ...?
நீ கொடுத்த எந்தன் தனிமை
தாகம் தீர்க்க துணை என்று
யாரும் வேண்டாமே...
துணை ஒன்று வேண்டும்
என்றால் நீ மட்டும் போதும்...
காதல் தாகம் அதை
நீதான் கொடுத்தாய்...
தனிமை தாகம் அதையும்
நீயே கொடுத்தாய்...

-Ajai Sunilkar Joseph

சனி, 23 ஜனவரி, 2016

ஏக்கம் தந்த ஏந்திழை

ஏக்கம் தந்த ஏந்திழைக்காக
ஏகாந்தமாக அவள் காதலை
எதிர்பார்த்து காத்திருந்தேன்...
பனித்துளிக்காக மலர்ந்த
மலர் போல மலர்ந்திருந்தேன்...
பனித்துளியை மறைத்து செல்லும்
கதிரவன் போல வந்தாள்...
காதல் இல்லை என்றாள்...
கண்களும் தானாய் கலங்கியது...
காத்திருந்த தவத்திற்கு
ஏமாற்றம்தான் வரமானதோ...!

By.... -Ajai Sunilkar Joseph

வியாழன், 21 ஜனவரி, 2016

எரிவதும் உருகுவதும் என் இதயம்தான்...

என் உயிர் என்னில்
உறைந்தே போனது...
இதயத்தில் நெருப்பை
மூட்டி எரிய விட்டாள்
அவள் காதல் தீயை...
எரிவதும் , உருகுவதும்
என் இதயம்தான்...
அவளுக்கு இதயத்தின்
வலி எங்கே புரியும்...!
எரிந்து சிதைவது நான்தானே...
புரிந்தால் என்னை
பிரிந்திருக்க மாட்டாளே...!

-Ajai Sunilkar Joseph

செவ்வாய், 19 ஜனவரி, 2016

செல்லத் திமிரடி உனக்கு....

ஒரு முத்தம் கேட்டால்
ஆயிரம் தடவை யோசித்து
பார்த்து ஒன்றுமே அறியாத
சின்ன குழந்தை போல்
இருக்கும் உன் செல்லத்
திமிருக்கு ஈடு இணை ஏதடி...?
கற்பனையில் மட்டுமே
முத்தங்கள் தருகிறாய்...
நிஜத்தில் உன்னை வெட்கம்
தின்று விடும் என்றுதானே...?
ஆனால் கற்பனையில் கூட
அழகாய் வெட்கப் படுகிறாய்...

-Ajai Sunilkar Joseph