வியாழன், 5 அக்டோபர், 2017

தேவதையை தேடி வலிகள் வந்ததோ கோடி...

தேவதையை தேடி 
வலிகள் வந்ததோ கோடி...


கற்பனைகள் சேர்த்து கவிதைகள் 
சில எழுதியிருந்தாலும்...
சொந்த வலிகளை கவிதைகளாய் 
வாசிக்க வேண்டுமென சிறு 
ஆசைக்காக மட்டுமே வாசிக்கிறேன்...


காதல் சொல்ல ஓடி வந்தேன்,
தேவதை உன்னையே நாடி வந்தேன்...
பொய்கள் சேர்த்து நீ கட்டிய காதல்
உணர்ந்த பின் என்னிதயத்தில் மோதல்...
கலங்கத் தெரியா கண்ணில் கலகம்,
நீதானடி எந்தன் உலகம்...
உண்மைத் தெரிந்து உதறிய பின்னே,
என்னிதயம் கதறிய வார்த்தைகள் எங்கே...?
சொல்லியழ நாதியில்லை 
சிதறி விட்டேன் கவிதைகளாய்,
என்னைத் தழுவும் நினைவுகளை 
சொல்லி விட்டேன் அலைகளிடம்...
என்னால் தாங்க முடியா பாரங்களை
விட்டெறிந்தேன் தூரங்களாய்...
மீண்டும் உறுத்துது பெண்ணே உள்ளம்,
என்னிடமே ஏன் கள்ளம்...!
என்னைக் கொள்ளையிட்டாய் உறவே
நெஞ்சில் கொள்ளியிட்டாய் மறவேன்...
காதல் என்றால் இதுவோ...?
என்னை மாற்றம் செய்வது எதுவோ...?
மதுவைத் தொட்டால் நானும் மதியிழந்து போவேன்,
மாதுவே உன்னால் நானும் கதியிழந்து போனேன்...
குற்றமில்லா உன்னை உதறி விட்டு போனேன்,
நித்தம் உனை நினைத்து கதறி விட்டு போனேன்...
உயிராய் உன்னிடம் உறவாட
என் வலிகளை விட்டே போகிறேன்...

காணொளி







ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிரியமானவளே உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

பிரியமானவளே...
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

ன்னிதயத்தின் பிரியமானவளே
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...
நான் நலமாகத்தான் இருந்தேன்,
நீ என்னை விட்டுப் பிரியும் வரை...
நீ என்னைப் பிரிந்து என்னுள்ளே
என்னை சிந்திக்க வைத்தாய்,
அளவுக்கு அதிகமான அன்பு
வைத்தால் என்னவாகும் என்று...
நீ என்னைப் பிரிந்த நாள்முதல்
என்னுயிரும் என்னைப் 
பிரிந்த உணர்வுகள் எனக்குள்...
இதயமே நீயும் என்னை
விட்டு பிரிந்து விடு,
நீ இருந்ததினால் தான் அவளை 
என்னுயிராய் காதலித்தேன்...
அவளே பிரிந்து போன பிறகு
நீ மட்டும் எதற்கு...?
வலிகளை சகித்துக் கொள்ளவா...?
தயவு செய்து என்னைப்
பிரிந்து விடு இதயமே...!
நான் நிம்மதியாக என் 
கல்லறைக்கு போவேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


திங்கள், 11 செப்டம்பர், 2017

வித்தகத்தி உன் நினைவால்...

வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி...


ன்னைத் தனிமையில் 
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து, 
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

கன்னக்குழியில் வீழ்த்தி யுத்தமொன்று செய்கிறாள்...

கன்னக்குழியில் வீழ்த்தி 
யுத்தமொன்று செய்கிறாள்...


பெண்ணொருத்திக் கண்டு,
அவளின் விழிகள் கண்டு,
சிரிக்கும் கன்னம் இரண்டு,
அதிலே குழிகள் கண்டு,
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்து விட்ட நானும்,
எழுந்து விட நினைத்தும்,
மங்கை மனதில் மயங்கி,
கன்னியின் காதலில் மடிந்தேன்...
அவளோ காதல் தந்தாள்,
என் இதயம் இதமாய் துடிக்க,
அவள் நினைவோ என்னை ஆள,
கட்டி விட்டேன் காதல் கோட்டை...
கட்டிவிட்ட காதல் கோட்டையில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் தந்து யுத்தங்கள் செய்கிறாள் 
என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்கிறேன் மொத்தத்தில்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி



திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...


னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க , மனதில் கனவோடு,
மங்கையவள் நினைவோடு,
மரணத்தை தழுவி , மண்மீது உதிர்ந்தேனே...!
தேவதையவள் வாழும் இடத்தில்,
மனிதனாய் நான் வாழ அனுமதி 
இல்லையென புரிந்து கொண்டேன்...
தேவதையவளின் பிரிவுக்கு பின்னே...
இறுதிவரை உறுதி செய்யாத காதலுடன்
அவள் நினைவாய் தொடர்கின்றேன்
என் காதல் பயணத்தை...
வழிதனில் கன்னியாய் வருவாளா...?
விழிதனில் கண்ணீராய் வருவாளா...?
புரியாத நானும் பரிவாக நிற்கின்றேன்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி






வெள்ளி, 2 ஜூன், 2017

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...


னம் விரும்புவதோ
மரணத்தை மட்டுமே...!
உன் நினைவுகள்தான்
என்னமோ அதைத் 
தள்ளிப்போடுகின்றன...
என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முடிவு செய்த பின்பும்
கமா போட்டு தொடர 
வைக்கிறாய் ஏனடி...?


By...Ajai Sunilkar Joseph




வியாழன், 1 ஜூன், 2017

பிறவிப்பலனை அடைவேனடி...

பிறவிப்பலனை அடைவேனடி...


நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று 
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என் 
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க 
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...

By...Ajai Sunilkar Joseph