ஞாயிறு, 22 ஜூலை, 2018

அம்மா...

அம்மா


ன்னை உருவில் 

காணுமுன்னே 

கருவில் கொண்டவள்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் பிறந்ததும் 

ஆனந்த வானில்

பறந்திருப்பாள் 

அம்மா...!


Ajai Sunilkar Joseph 


காற்றை  முந்தாணைக்குள்

வடிகட்டி சுவாசிக்கத் தந்த

மூன்றெழுத்து மந்திரம்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் இறைவன் 

படைப்பாயினும்

வலியடைந்தவள்

நீதானே...

அம்மா...!


Ajai Sunilkar Joseph 



வள் இரத்தம் கொஞ்சம்,

அவள் சதையில் கொஞ்சம்,

அவள் சுவாசம் கொஞ்சம்,

அவள் பாசம் கொஞ்சம்,

அவள் ஏக்கம் கொஞ்சம்,

அவள் பரிதவிப்பு கொஞ்சம்,

அவள் வலியில் கொஞ்சம்,

அவள் உணர்வில் கொஞ்சம்,

அவள் உயிரில் கொஞ்சம்,

அவள் அழுகயில் கொஞ்சம்,

அவள் கண்ணீரில் கொஞ்சமாய்,

அனைத்திலும் பிய்த்தெடுத்த

மிச்சமே நான்...


Ajai Sunilkar Joseph 









வெள்ளி, 20 ஜூலை, 2018

ஏன் பிறந்தேன்...?

இன்று எனக்கு பிறந்தநாள்,
ஆனால் ஏன் பிறந்தேன் என்ற 
கேள்விதான் எனக்குள்...!

"எத்தனை பாதைகளுக்கு பரிந்துரைகள்?
எந்த பாதையில் நான் செல்ல வேண்டும் 
என்ற குழப்பங்களுடன் நான்..."


"ஆம்...
           நான் என் வாழ்க்கையின் முகவரியைத் 
தேடுகிறேன்...

"சிலர் அழுகை என்கின்றனர்,
சிலர் கஷ்டம் என்கின்றனர்,
சிலர் போராட்டம் என்கின்றனர்,
சிலர் வலிகள் என்கின்றனர்,
ஒருசிலர் சந்தோஷம் என்கின்றனர்."

அழுகையை கடந்து வறண்டு போன
என் கண்களுக்கு வசந்தம் ஓர் கானலோ...?

கஷ்டங்களைத் தாண்டியும் என் வாழ்க்கை
என்ன கடக்க முடியாத வானமா...?

போராட்டங்கள் எத்தனையோ போராடினேன்
போர்க்களமே இல்லாமல் போராட்டமா இல்லை
வாழ்க்கையே போர்க்களமா...?

வலிகளே என்றாலும் வலி தீர 
ஓர் வழி கூடவா இல்லை...?

சந்தோஷம் என்றாலும் அதுவும் சில காலம்தானோ...?

"இப்படி ஒவ்வொரு பாதைகளிலும் பல உணர்வுகளை
நான் கண்டு புரிந்து கொண்டேன்,

ஆனால்...
                     எனக்கு மட்டும் ஏன் இந் குழப்பங்கள்,
மேற்கண்ட அத்தனைப் பாதையிலும் விடை கிடைக்காத
புதிர்களே அதிகள் கிடைக்கின்றன,"

எங்கே விடை தேடுவதென்பதே என் குழப்பமே

"விடைகளே இல்லையென்றால் வாழ்க்கை என்ன வட்டமா...?

"இங்கே நான் எதைத்தேடுவது எதை அடைவது...?

"ஓரடி எட்டு வைத்தால் ஈரடி சறுக்கல்,
பொறுமையாக எழலாம் என்றால்
யார்யாரோ மிதிக்கிறார்கள்,
வெடுக்கென எழலாம் என்றால் 
பின்னின்று தள்ளப் பலபேர்,"

வாழ்க்கை ஒன்றென்றால் துன்பங்கள்,துரோகங்கள்,
விரோதங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,"


"ஏனிந்தப்பிறவி என்று கலங்குகிறேன்,
விடைதான் கிடைக்கவில்லை,

வாழ்கைதான் Black and white ல இருக்கு
Dress ஆவது Colorful ஆ இருக்கட்டும்...
😊😊😊😊
Ajai Sunilkar Joseph

யாரிடம் விடை கிடைக்குமென்றால் என்னிடமே 
உள்ளது என்று அன்பானவர்களின் பேச்சு,
அட போங்கையா நாசமா போச்சு, இதுதான் என் பேச்சு,"

"இங்கு என் தேடல் எதுவென்றுத் தெரியாமலே 
அதன் அடைதலைத் தேடுகிறேன்,"


என்னை நானே சோதிக்கிறேன் என்னில் பிழையா?
என் எண்ணத்தில் பிழையா?ஏதும் புரியவில்லை."

20-7-1993 To 20-7-2018 வரையிலான என் தேடல்
எதுவென்று புரியவில்லை...



சருகாய் மாறிவிட்டால் 

மட்கத்தான் வேண்டுமா...?

விதைகளுக்கு உரமாகலாமே...!

நாளை அதுவும் மரமாகலாம்.



செவ்வாய், 17 ஜூலை, 2018

பேனா...


பேனா...

முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


கொஞ்சம் தூண்டுகிறேன்

தீண்டிச் செல்கிறாய் 

காகிதத்தை

உயிர் பெறுகிறது கவிதை...!


 Ajai Sunilkar Joseph



திரம் சொட்டுகிறாய்,

காகிதம் சுமக்கிறது,

கவிதை பிறக்கிறது...!

Ajai Sunilkar Joseph 


ன் குருதி சிந்தியும்

உருவம் 

கொடுக்கிறாய்

என் வார்த்தைகளுக்கு...!

Ajai Sunilkar Joseph 


தூ
ண்டலுக்கு 
நானிருக்க

தீண்டலுக்கு நீயிருக்க

துவளாமல் அவளிருக்கிறாள்...!

காகிதமாக...

Ajai Sunilkar Joseph 



நீ

நனைக்கின்ற 

எச்சத்தில் 

என்

கவிதைகளே மிச்சம்...!

Ajai Sunilkar Joseph










By.....

திங்கள், 16 ஜூலை, 2018

சுவாசித்த காற்று எங்கே...?

சுவாசித்த காற்று எங்கே...?


முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇


நீரோடும் ஓடையோரம்
தென்மேற்கு பருவக்காத்து,
அடைப்பட்ட அறைக்குள்ளே
வீசுதே மின்சார காத்து...!

கம்மாக்கரை காத்துமிங்கே
காணாமல் போச்சே..!
குளிரும்,தளிரும் போய்
தேசம் சூடாகிப்போச்சே...!

ஆத்தங்கரை காத்தும் 
அழிந்தேதான் போச்சா...?
அனல்மூட்டும் காத்தும்
ஆள்வதும் ஆச்சா...?

தென்றலும் இங்கே
தீய்ந்தேதான் போச்சோ...?
தினந்தோறும் வெட்கை
தின்று விட்டுப் போச்சோ...?

பருவக்காத்தும் இங்கே 
திசைமாறிப் போச்சே...!
சுவாசக்காத்தும் இங்கே 
விஷமாகிப் போச்சே...!


Ajai Sunilkar Joseph


ஞாயிறு, 15 ஜூலை, 2018

கனவில் என் கற்பனை


கனவில் என் கற்பனை
முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇👇👇👇
தனிமையில் ஓர் பயணம்...
👆👆👆👆👆👆👆


ழி முத்துகள் இரண்டை
அவள் விழிகளாய் கண்டேன்,
ரசிக்கலாம் என்றே 
அருகினில் சென்றேன்,

குழிகள் இரண்டை
அவள் கன்னத்தில் கண்டேன்,
கொஞ்சம் வழுவி 
அதனுள் வீழ்ந்தேன்,

எழும்பிட நினைத்தேன்,
மயங்கியே கிடந்தேன்,
மங்ககை விழியும்,கன்னக்
குழியும் போதும் வீழ்த்திட...?

அவளோ பூஞ்சிலை 
போன்ற பெண்சிலை,
எனக்குத் தாரமான
தங்கத் தாமரையவள்,

அங்கத்தின் அழகை நான்
இன்னும் சொல்லவில்லை,
என்னில் ஓர் அங்கமாய்
அவள் இருப்பதினால்,

அன்பை அள்ளித் தந்திடுவாள்
அன்னைப் போல தாங்கிடுவாள்,
எனக்காய் வந்த தேவதை
எனக்கு மட்டும் தெய்வமவள்,

கண்களில் கனவு தேவதையாய்
அவளே எந்தன் கலங்கரையாய்,
கருப்போ,வெளுப்போ தெரியவில்லை
அவள் எங்கிருக்காளோ புரியவில்லை...



Ajai Sunilkar Joseph



By.....

                                 

சனி, 14 ஜூலை, 2018

தனிமையில் ஓர் பயணம்...

தனிமையில் ஓர் பயணம்...


னிமை நதியில் நாதியற்ற ஓடமாய் நான்.
சொந்தங்களாய் பலரும்,உறவுகளாய் சிலரும்,
நண்பனாய் நீயும்,தோழியாய் அவளும்,
காதலியாய் என்னவளும்,யார் யாரோ 
வந்து போன வழித்தடமாய் என்னிதயமும்,

துடுப்பாய் வந்தோரெல்லாம் 
தூக்கியெறிய,சொந்தமெல்லாம் தூரமாக,
உறவுகளெல்லாம் உறவறுக்க,
நண்பனும் கடந்து செல்ல, 
தோழியும் விட்டு விட்டாள்,
காதலியாய் வந்தவளும் விட்டு விட்டாள்,

எனக்குள்ளே உயிரறுந்த வேதனை,
யாருக்கு நான் செய்த துரோகம்
என்னை விடாமல் துரத்துகிறது என்று...!
இப்படியும் பல நாளாய் சிந்தித்து 
பழகிக்கொண்ட நானும்,

சிலரின் அன்பான பேச்சுக்கெல்லாம் 
வழுவி விடுகிறேன்,
யாருக்கும் இதயத்தில் இடமில்லை 
என்பதால் என்னிதயத்தின் 
வழித்தடத்தையும் அழித்து விட்டேன்,

வாழத்தெரியாதவன் என்று என்னை
சொன்னாலும் பரவாயில்லை,
சிதைந்த என்னிதயத்தை தேற்றிக்கொள்ள
தனிமையில் ஓர் இனிமை கானம் தேடி
என் பயணத்தை தொடர்கின்றேன்...


காணொளி



By...Ajai Sunilkar Joseph


சனி, 7 ஜூலை, 2018

நினைவுகளே தோரணமாய்...


நினைவுகளே தோரணமாய்...


தேயாத பெண்ணிலவே
உனைக் காணாத கண்ணினிலே
கரைந்தோடும் தாரைகளாய்
என் காதல் கொட்டுதடி,

காற்றொன்று என்னைத்
தாண்டிப் போனால் பெண்ணே
உந்தன் மூச்சும் என்னைக்
கொஞ்சமாய் தீண்டிப் போகுதடி,

வித்தாரக் கண்ணழகே
எந்தன் விழிநீரும் விம்முதடி,
மந்தாரைப் பூவழகே உன்னை
மனதாரக் காதலித்தேன்,

தோளோடு தோள் சாய்ந்து,
உன் மௌனத்தின் சலசலப்பை
சிறு சிறு கவிதைகளய்
மொழிப்பெயர்பேன்,

உன் நளினத்தின் சலனத்தை
சல்லடையில் சலித்தெடுத்தேன்,
என் விழிகண்ட கனவானாய் 
தூங்காமல் துயிலெழுந்தேன்,

கலைந்தோடும் முகிலானாய்
நெஞ்சில் அணையாத அகலானாய்,
நிலைகொண்ட புயலானாய்
என்றோ கரை கடந்து விட்டாய்,

நீ மழைமேகமென்றால் 
என்னை மனதார நனைத்துவிடு,
எரியாத தீயென்றால் உன் 
நெஞ்சோடு அணைத்தவிடு,

நான் இல்லாத ஓர் நாளில் 
என் நெஞ்சம் நீயறிவாய்,
உன்னை நினைக்காமல் நானுமில்லை
உன்னை நினையாத நாளுமில்லை...

நெஞ்சோடு மஞ்சம் வைத்தேன்
பற்றி எரிந்த பஞ்சானாய்,
மரணத்தின் வாசலில் பெண்ணே
உன் நினைவுகள் தோரணமா...?




காணொளி

Ajai Sunilkar Joseph


By...
கரையோரம் சிதறிய கவிதைகள்