சனி, 20 பிப்ரவரி, 2016

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும் விழிக்கமாட்டாயோ...!!!

குடி குடி மனிதா உன்

குடி கெடும்வரை குடி...

குடித்து நீ தள்ளாட

குடியால் உன் குடி தள்ளாட...

என்னை நீ குடித்து முடிக்க

உன் குடியை நான் கெடுத்து முடிக்க...

உன் வருமானம் சாராயம் தேடி

உன் தன்மானம் அவமானம் தேடி...

உன்னால் அரசின் குடி வளர

பின்னால் உன் குடும்பம் குடி தளர...

குடித்து உன் குடல் வேக

குடியால் உன் குடி மூழ்க...

குடி குடியென்று நீ குடி தேடி

பொண்டாட்டி தாலி அடகுக்கடை தேடி...

குடி பொருள் விற்றுக் குடி

உன்னை கல்லறைக்குடி வைக்கக்குடி...

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும்

உன் குடியை வாழ வைக்க மாட்டாயோ....!!!

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

1 கருத்து:

  1. ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அருமையான வரிகள் ! அருமையான படமூம் கூட ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!