வியாழன், 1 ஜூன், 2017

பிறவிப்பலனை அடைவேனடி...

பிறவிப்பலனை அடைவேனடி...


நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று 
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என் 
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க 
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...

By...Ajai Sunilkar Joseph
6 கருத்துகள்:

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!