வேட்டையாடப்பட்ட என்னிதயம்....
சிறகடித்துப் பறந்தேன் பெண்ணே,
என்னைச் சிறைபிடித்துச் சென்றாய்,
உன் கள்ளமில்லாப் பார்வையால்
என்னைக் கொள்ளையிட்டுப் போனாய்,
உன் விழிக்கூண்டுக்குள் என்னை
சிறைவைத்து என்னுயிரிலே உறைந்தாய்,
என்னுள்ளே நீ வந்த பின்னால்
நான் உனதாகிப்போனேன்,
எந்தன் தனிமைக்கதவைத் திறந்துத்
தாழிட்டு விட்டு இப்போது நீ மட்டும்
ஏன்தான் வெளியேற முயல்கிறாயோ...!
மீண்டும் என்னைத் தனிமைத் தீவினில்
தள்ளிவிட்டு என் காதலைத் தீயினில்
கருக்கி விட நினைக்காதே...!
உன் நினைவுகளினால் என்னிதயம்
வேட்டையாடப்பட்ட பின்னால்
என்னுயிர் மொத்தமும் உந்தன்
விழிவாள் வழி சொட்டுகிறதே
தெரியவில்லையா என் கண்ணே...!
நான் பாவமில்லையா பெண்ணே...!
சிறகடித்துப் பறந்தேன் பெண்ணே,
என்னைச் சிறைபிடித்துச் சென்றாய்,
உன் கள்ளமில்லாப் பார்வையால்
என்னைக் கொள்ளையிட்டுப் போனாய்,
உன் விழிக்கூண்டுக்குள் என்னை
சிறைவைத்து என்னுயிரிலே உறைந்தாய்,
என்னுள்ளே நீ வந்த பின்னால்
நான் உனதாகிப்போனேன்,
எந்தன் தனிமைக்கதவைத் திறந்துத்
தாழிட்டு விட்டு இப்போது நீ மட்டும்
ஏன்தான் வெளியேற முயல்கிறாயோ...!
மீண்டும் என்னைத் தனிமைத் தீவினில்
தள்ளிவிட்டு என் காதலைத் தீயினில்
கருக்கி விட நினைக்காதே...!
உன் நினைவுகளினால் என்னிதயம்
வேட்டையாடப்பட்ட பின்னால்
என்னுயிர் மொத்தமும் உந்தன்
விழிவாள் வழி சொட்டுகிறதே
தெரியவில்லையா என் கண்ணே...!
நான் பாவமில்லையா பெண்ணே...!
![]() |
Ajai Sunilkar Joseph |
காயம்பட்ட இதயத்தில் கவி அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குகாதலி மனம் இரங்கட்டும்!
பதிலளிநீக்குஇரங்காமல் இருப்பாளா...!
நீக்குஜாதி இரங்காதல்லவா...!
ஜெயம் உண்டாக்கட்டும்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்கு