ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பூவே....

பெண் பூவே....



ண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய் 
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...


Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...





பெண் பூவே....


பெண் பூவே உன்னைக் 

காணாமல் உன் பூந்தோட்டம்
முழுவதும் தேடுகிறேன்...
எங்கேதான் மறைந்தாயோ...!
கதிரவனாய் என்னைக் 
கண்டு கண்மூடி மறையும்
அதிசய மலரும் நீதானோ...!
உன் உயிரோடு உயிராக,
பூச்சரம் தொடுக்கும் நாராக...
நானாக வேண்டும் என்ற
ஆசையை  சொல்லியும் 
புறக்கணித்து ஏனோ பெண் பூவே...?



Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...

6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!