செவ்வாய், 1 மார்ச், 2016

விவசாயி காதலோ....!

நட்டு வச்ச நாத்தெல்லாம்

              துளிர் விட்டு வளருதடி...

நாத்து நட்ட என் நெஞ்சம்

              உன் நெனப்புல வளருதடி...

பசிச்சாலும் தவிச்சாலும்

              உன் நெனப்பே போதுமடி...

உன் நெஞ்சுல நான் வெதச்ச

              என் காதல் எங்க புள்ள...

பூத்திருந்து வெளஞ்சிடிச்சோ

              காத்திருந்து அறுத்தாயோ...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

7 கருத்துகள்:

 1. நட்டு வச்ச நாத்தெல்லாம்

  துளிர் விட்டு வளருன்னா... தண்ணீருக்கு பஞ்சமில்லை என்று கருதலாமா....???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான வலி போக்கரே
   காதல் நாத்துக்கு தண்ணீர்
   தேவை படுமா...???

   நீக்கு
 2. புகைப்படத்துக்கு ஏற்ற பொருத்தமான வரிகள் நன்று நண்பரே...
  இப்பொழுது கருத்துரை இடும் முறை அருமையாக இருக்கின்றது நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அன்பரே....
   கருத்துரை இடுவதற்கு
   சிறப்பான அமைப்பை
   அமைத்து தந்தவர்....
   நம்ம DD சகோதரர் தான் நண்பரே...

   தங்கள் கருத்துரைக்கும்
   வருகைக்கும் மீண்டும் நன்றிகள் நண்பரே....

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!