வெள்ளி, 29 ஜூன், 2018

வேட்டையாடப்பட்ட என்னிதயம்

வேட்டையாடப்பட்ட என்னிதயம்....


சிறகடித்துப் பறந்தேன் பெண்ணே,
என்னைச் சிறைபிடித்துச் சென்றாய்,
உன் கள்ளமில்லாப் பார்வையால் 
என்னைக் கொள்ளையிட்டுப் போனாய்,
உன் விழிக்கூண்டுக்குள் என்னை
சிறைவைத்து என்னுயிரிலே உறைந்தாய்,
என்னுள்ளே நீ வந்த பின்னால்
நான் உனதாகிப்போனேன்,
எந்தன் தனிமைக்கதவைத் திறந்துத் 
தாழிட்டு விட்டு இப்போது நீ மட்டும் 
ஏன்தான் வெளியேற  முயல்கிறாயோ...!
மீண்டும் என்னைத் தனிமைத் தீவினில்
தள்ளிவிட்டு என் காதலைத் தீயினில்
கருக்கி விட நினைக்காதே...!
உன் நினைவுகளினால் என்னிதயம்
வேட்டையாடப்பட்ட பின்னால் 
என்னுயிர்  மொத்தமும் உந்தன் 
விழிவாள் வழி சொட்டுகிறதே
தெரியவில்லையா என் கண்ணே...!
நான் பாவமில்லையா பெண்ணே...!


Ajai Sunilkar Joseph

ஞாயிறு, 13 மே, 2018

பூமியுள்ள காலமெல்லாம் சாமியாய்

பூமியுள்ள காலமெல்லாம் சாமியாய்



இமைக்குள் விழிபோல்
இரவும்,பகலும் என்னை
காத்த உன்னைப்போல்
இங்கே வேறாருத் தாயே...!
விழுந்த ஒரு துளி மழைநீரை
முத்தாய் காத்த சிப்பி போல்,
உனக்குள் வீழ்ந்த ஒருதுளி
உதிரத்தை இரத்தமும்,
சதையுமாய் உருகொடுத்து,
உந்தன் சுவாசத்தையே
உயிராய் கொடுத்த உன்னை
எப்படி காப்பேனோ...!
பூமியுள்ள காலமெல்லாம்
சாமியாய் வணங்கினாலும்
என்னைப் பெற்ற கடன் தீராதே...!
எனக்கான ஜென்மங்கள்
எத்தனையோ அத்தனை
ஜென்மங்களும் நீயே வேண்டும்
எனக்கே குழந்தையாக...
வரம்கொடு தாயே உன்னையே
நான் மீண்டும் பெற...!
என்னைக் கருவில் சுமந்த
அன்னையே உன்னை தினமும்
சுமக்கும் பாக்கியம் கொடு...
By...Ajai Sunilkar Joseph


அன்னையர்தின வாழ்த்துகளுடன்



வெள்ளி, 11 மே, 2018

இதயத்தை கொய்தவளே...

இதயத்தை கொய்தவளே...

படபடவென சிறகடித்தும்
ஓரிடத்தில் பறக்கும் இரு
பட்டாம்பூச்சிகளா உன் விழிகள்...?

துளியும் பார்வை சிந்தாமல்
கோர்வையாய் இதயத்தை
கொய்து போறவளே...!

உன் பார்வைபட்ட மறுநொடியில்
வெற்றிடம் தேடிய காற்றாய்
உன்னுள் வர முயல்கிறேனடி,

ஈர்க்கும்  காந்த விழியழகே
நீயிருக்கும் திசையெல்லாம்
கவிதைகள் எழுதி வைத்தேன்,

என் இமை மயிர்களுக்கு
தூரிகையெனும் உரு கொடுத்த
செந்தமிழ்த் தாரகையே,

உன் கண்களை ஓவியமாய்
இதயத்தில் வரைந்து விட்டேன்,
நான் மட்டும் ரசித்துக்கொள்ள...!

என்ன மாயம் செய்தனவோ
உன் விழிகள்...!
என் விழிகளின் ஈரத்தையெல்லாம்
வரிகளாகத் தொடுக்க வைக்கிறது,

அதை வாசிக்கும் உந்தன்
விழிகளின் அழகைக் காட்டிவிடு
அந்த ஞாபகத்தை எனக்குள்
பூட்டி வைப்பேன்,

பூட்டி வைக்கும் ஞாபகத்தை
கனவுகளாய் உரு கொடுத்துத்
நிஜமதில் வாழ வைப்பேன்,

பெண்ணே எந்தன் இதயத்தின் 
சிந்தையெல்லாம் உந்தன்
கண்களால் சிதற விட்டேனடி,

ஏனடி என்னை புலம்பவிட்டு
தள்ளிநின்று வேடிக்கைப்
பார்கிறாய்...?

பதில் கூறா கண்மணியே
உன் மௌனத்தால் என்னைக்
கூறு போட்டுக் கொல்லாதே,

பார்வையால் என்னைப்
பட்டென சாய்த்தப் பாவையே
என்னைப் பாடாய் படுத்தாதே,

தொலைதூரத் தாமரையே
என்னக்குத் தாரமாய் வந்து
என்னை உனக்குச் சொந்தமாக்கிடு,

உன் நெஞ்சில் ஆடவைக்க
தாலிக்கெடி ஏந்தி நமக்கான
நாள் நோக்கி காத்திருக்கிறேன்,

வா வா பெண்ணே மனம்
சேர்ந்து மணம்கொள்ள
என்னவளாய் எனக்காக...

By...Ajai Sunilkar Joseph 




செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இரக்கமே இல்லாத விழிகள்

இரக்கமே இல்லாத விழிகள்


நான் விண்ணில் பார்த்த 
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த 
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும் 
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள் 
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும் 
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை 
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை 
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
By...Ajai Sunilkar Joseph


Video




ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அவள் தந்து சென்ற கவிதைகள்

அவள் தந்து சென்ற கவிதைகள்



அன்பான என் தேவதை,
அவளுக்கோ அழகான புன்னகை,
அவளும் , அவள் புன்னகையும்
என் இதயத்தை புண்ணாக்கி
என்னை ரணங்களாய் ஆள்கிறது...
என் கண்களில் அவள் 
காணாமல் போன நாள்முதல்,
என் இதயம் அழுத வார்த்தைகளை
அவளின் ஞாபகத்தில் எழுதிக் கொட்டுகிறேன்,
என் இதயத்தின் வாசகியவள்
எங்கே சென்றாளோ தெரியவில்லை,
என் கண்களை விட்டு மறைந்தாளா...?
அவளை விட்டு நான் மறைந்தேனா...?
ஏதும் புரியவில்லை...
அவள் நினைவுகளை சுவாசித்து
அவளிடம் கவிதைகளால் யாசித்து
நானே வாசித்து விடுகிறேன் 
அவள் தந்து சென்ற கவிதைகளை...

By...Ajai Sunilkar Joseph 


காணொளி



திங்கள், 2 ஏப்ரல், 2018

மை விழியாள்...

மை விழியாள்...

என் உயிரை ஊசலாட  
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து 
என் கண்ணை விட்டு 
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன் 
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன் 
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...


By...Ajai Sunilkar 



காணொளி....



வெள்ளி, 30 மார்ச், 2018

புருவ அழகு...

புருவ அழகு...

உந்தன் புருவத்தின் கீழ் 
திறந்து மூடும் சொர்க்க
வழிகளா உன் விழிகள்...!
அதனுள் அடைபட்ட
என்னை விடுதலை
செய்யாதே பொன்மானே...!
அங்கேயே யுகா யுகங்களாய்
வாழ விரும்புகிறேன்,
என்னைத் துரத்திவிட்டு
தூரம் செல்லாதே
என் நெஞ்சம் தாங்காது...

-Ajai Sunilkar Joseph



காணொளி