கொத்தாய் பிய்த்தெடுக்க பார்வையால் போர்த் தொடுத்தவளே...! என் இதயத்தின் மென்மையை அறியாத பெண்மை யா உனது...! என் இதய பூமியின் சாமியே நீதானடி... பெண்ணே...! உன்னையே ஆராதிக்கும் பக்தனாய் நான் இருக்க, ஏனடி என்னை பித்தனாய் மாற்றினாய்...? என் மேல் சினம் கொண்ட சினேகிதியே உன்னை மணம் கொண்டால் தீருமோ இந்த தண்டனை...? உன் தணியா கோபத்தை உன் அன்புக்குப் பணிந்த என்மேல் ஊற்றாதே, சிறு சிறு கவிதைகளாய் என்னில் ஊற்றெடுக்கும் தூயவளே உன் பார்வை தீயை ஊற்றி என் காதலை கொஞ்சம் எரிய விடு...!
உன் கண்ணிமைகளின் சிறகடிப்பில் என்னைச் சிறைபிடித்தாய், இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன், தாய் காணா சேய் போல் உன் அகம் தேடி உன் விழிகளில் அகதியாய் சுற்றித்திரிகிறேன், உன் இதயத்தில் என்னைக் குடியேற்றிக் காதல் குடியுரிமைக் கொடுத்து விடு, இல்லையேல் உன் மனதில் என்னைக் கைது செய்து
உன் கைகள் கோர்த்து, உன் தோளோடு உரசி, சற்றும் இடைவெளி விடாமல், கை விரல்களின் இறுக்கத்தில் நெடுந்தூரம் நடந்து விட்டேன்... உன்னிரு விழிகளிடம் என் விழிகளால் பேசி, உந்தன் காதுகளோரம் கவிதைகளால் பேசி நெடுந்தூரம் நடந்து விட்டேன்... என்னைச் சிறைபிடித்த பாவையுந்தன் நினைவுகளை என் பாதையோரம் பரப்பி வைத்து நெடுந்தூரம் நடந்து விட்டேன்... பெண்ணே உன்னால் என்னில் பல கனவுகளைக் கண்டெடுத்து என்னையே நான் மீண்டெடுத்து நெடுந்தூரம் நடந்து விட்டேன்... என்னை நித்தம் சித்திரவதை செய்யும் உந்தன் நினைவுகளைத் தேடித் தேடி நானும் நெடுந்தூரம் நடந்து விட்டேன்... உன்னைக் கண்டுபிடித்தும் தொலைதூரம் மறையும் கானலாய் நீ மறைந்து விடுவாயோ என்ற பயத்தாலே நான் தனியாக நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...