வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கண்ணீராய் கரைந்தாளோ...!

காதலே...
                 அவள் உன்னை
கனவில் சுமந்து...
                 என்னை கணவனாய்
நினைப்பாள் என்றே
                 கனவுகள் கண்டேனே...!
நடமாடும் மெழுகு
                 பொம்மையோ அவள்...!
காலம் கொழுத்தி விட்ட
                 பிரிவின் அழுகையால்...
என்னை விட்டு
                 கரைந்தே போனாளோ...!
கரையும் போது
                 இதயத்தை உடைத்து
விழி வழியே
                 கண்ணீராய் கரைந்தாளோ...!
பிரியும்போது பேசி
                சென்ற சின்ன சின்ன
வார்த்தை வலிகளால்....! 

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி நண்பரே
   வருகைக்கும் , கருத்துரைக்கும்

   நீக்கு
 2. வேதனையின் உச்ச வரிகள் தொடரட்டும் கவிதைகள் வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் , கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே .....
   கவிதைகள் தொடரும்....

   நீக்கு
 3. காதல் என்றாலே வேதனைதானா அஜய்!!??ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதல் வரும்போது சுகம்...
   அதனுடம் வாழும்போதும் சுகம்....
   காதல் பிரிந்தால் வேதனைதான்....
   வேதனையிலும் காதல்
   வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்....

   நீக்கு
 4. சோகத்தை விட்டு மகிழ்ச்சிக்கு வரவும்!

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் மகிழ்சிப் பதிவு வரும் நண்பரே....

   நீக்கு
 5. காலம் இன்னும் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது..

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!