செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விழிகள் தந்த வினாத்தாள்...

காதல் தேர்வினில் அவள்

விழிகள் தந்த வினாத்தாளுக்கு...

அவளின் மனத்தாளினில் விடைகள்

வரைந்தேன் வார்த்தை வரிகளாக...

அவள் விழிகள் தந்த வினாத்தாளுக்கு

அவள் மனமே விடைத்தாள்

ஆனது என் குற்றமா...?

ஏதோ கிறுக்கி விட்டேன்

என்று சற்றும் யோசிக்காமல்...

என்னை ஏசிச் சென்றாள்...

என் காதலுக்கு அவள்

மதிப்பெண் தான் தருவாளோ...!

இல்லை என் காதலை

மதிக்காத பெண்ணாய் ஆவாளோ...!

எதிர் பார்த்து நிற்கிறேன்...

ஏமாற்றம் தான் தருவாளோ...!

என்னில் மாற்றம்தான் தருவாளோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

16 கருத்துகள்:

  1. வினாத்தாளின் விடை சீக்கிரமே கிடைக்கும். நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடை எழுதி விட்டேன்...
      வெற்றியா தோல்வியா
      என்ற காத்திருப்பே இது...

      நீக்கு
  2. இன்னமும் பரீட்சைதான் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா அஜய்?

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே....
      எழுதி விட்டேன் ...
      இன்னும் முடிவு தெரியவில்லை....

      நீக்கு
  3. பாஸா..பெயிலா... அடுத்தது அதுதான்...

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹ்ஹ் அஜய் என்ன இன்னும் தேர்வு முடியவில்லையா??!!! நாங்கள் நினைத்தோம் நீங்கள் பாசாகியிருப்பீர்கள்/வெற்றி பெற்றிருப்பீர்கள் என்று. சீக்கிரமே வெற்றி பெற வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ....
      வெற்றி,தோல்வி
      எதுவானாலும் சந்தோஷமே....

      நீக்கு
  5. மதிப்பெண் 100 தருவாள் அந்தப்பெண் மதியழகி கவலை வேண்டாம்

    பதிலளிநீக்கு
  6. வெற்றி பெற்று காதலை தொடராக கவிதையாக்க வாழ்த்துக்கள் சகோ))))

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!