புதன், 13 ஏப்ரல், 2016

இப்போது அறுவடை நாட்களோ...!

இதயத்தில் விதைத்தாள்

                     காதல் விதைகளை...

அன்பை ஊற்றியே

                     உணர்வுகளை வளர்த்தாள்...

விதைப்பின் பலனாய்

                     காதலே விளைந்தது...

இப்போது அறுவடை

                     நாட்களோ என்னமோ

தினமும் நினைவில்

                     வந்து இதயத்தையே

கொய்து செல்கிறாள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

15 கருத்துகள்:

  1. இந்த மாதிரி இதயத்தைக் கொய்யும் போது -
    படக்கு..ன்னு பிடித்து விடுங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் கொய்து செல்வது
      காதலைதான் என்றால்
      பிடித்து விடுவேன்....
      காதல் விளைந்த
      இதயத்தையே கொய்தால்
      எப்படி பிடிப்பேன்...

      நீக்கு
  2. விளைச்சல் எப்படி அமோகம்தானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளைச்சல் (காதல்)
      அமோகம்தான் .
      ஆனால்....
      மொத்தமும் அவளே
      அறுவடை செய்தாளே....
      என் இதயம் குத்தகை நிலமானதே...

      நீக்கு
  3. நன்றி நண்பரே ....
    உங்களுக்கும் எம் வாழ்த்துக்கள்....
    வருகைக்கு நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. அறுவடை நாள்... லாபம் யாருக்கு?

    பதிலளிநீக்கு
  5. அறுவடை நாட்கள்தான்..வெயிலில் நிற்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் , வருகைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  6. இதயத்தைத்தானே கொய்தால் ? இதயத்தின் வேர் இருக்குமே மீண்டும் துளர்க்கட்டும் நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. கொய்தாள் ? என்று வாசிக்கவும்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!