நுரைகள் பொங்கும்
அலைகள் கூட
கரையில் கொஞ்சம்
மோதிச் செல்லும்...
கரைகள் என்ன
கோபித்தா கொள்ளும்...
கரையில் உன்னிடம்
நேசம் வைத்த
எந்தன் சுவாசம்
உன்னைக் கொஞ்சம்
கொஞ்சும் போது...
மெல்லமாய் உன்னைத்
தீண்டிச் சென்றால்...
கோபம் வேண்டாம்
காதல் கண்மணியே...
Ajai Sunilkar Joseph பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
வலையுலக நட்பர்களே நான் ஒரு
தொடர்கதை எழுத துவங்கியுள்ளேன்....
ஆனால் எனக்கு கதை எழுதியே பழக்கமில்லை...
இதிலே தொடர்கதை வேறேயா...!
வருகிற நாட்களில் தொடர்கதையை
இதே தளத்தில் பகிர்ந்து கொள்ள
சிறிய ஆவலாய் உள்ளேன்....
கதையை பகிரலாமா என்று உங்கள்
கருத்துகளை எனக்கு தாருங்கள் நட்பர்களே...
(கதை ஒரு உண்மை சம்பவம்
ஆனால் கற்பனைகள் சேர்க்கப்பட்டது)
தயக்கம் வேண்டாம்... தாராளமாக பகிரலாம்....நண்பரே.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குபகிர்கிறேன்...
கவிதை நன்று வாழ்த்துகள் கதை எழுத தயக்கம் வேண்டாம் தொடருங்கள் ஆவலாய் நானும்.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகதை தொடர்கிறேன்...
தயக்கம் எதற்கு நண்பரே
பதிலளிநீக்குஇது நமக்கான தளம்
எழுதுங்கள்
வாசிக்க
கருத்துக் கூற
காத்திருக்கிறேன்
நன்றி நண்பரே...
நீக்குவிரைவில் கதையை
வெளியிடுகிறேன்...
பூக்கள் உங்களைக் கேட்டா பூக்கிறது? கனிகள் உங்களைக் கேட்டா காய்க்கிறது? நிலவு உங்களை கேட்டா ஒளிர்கிறது? தென்றல் உங்களை கேட்டா தழுவுகிறது? எழுதுவதற்கு எதற்கு......?
பதிலளிநீக்குசரி நண்பரே....
நீக்குஎழுதுகிறேன்....
கவிதை நடையில் கதையினைத் தொடருங்கள்
பதிலளிநீக்குசரி நண்பரே...
நீக்குமுயன்று பார்க்கிறேன்...