திங்கள், 2 ஜூலை, 2018

காகிதத்திடம் என் காதல்

காகிதத்திடம் என் காதல்


பேனாவின் முத்தத்தடத்தில் 
பதிந்த வார்த்தைகளை நேசித்தாள்,
வலிகளுடன் நான் படைத்த
என் வரிகளை நேசித்தாள்,
அந்த வரிகளைப் படைத்த
என் கரங்களை நேசித்தாள்,
வரிகள் வழியே அவள் இதயம் 
நுழைந்த கவிதைகளை நேசித்தாள்,
என்னிதயம் வரிகளில் தொடுத்த
காதலை நேசித்தாள்,
இப்படியே அவளுள் சென்ற 
என்னை மொத்தமாய் வாசித்தாள்,
இவைகளை யாசித்த அவளோ
இறைவன் படைத்த வெள்ளைத்தாள்,
காகிதமாய் அவளிருக்க என் 
பேனாவின் ஒத்தடங்களாய் 
காதலைச் சொல்கிறேன்,
அவளிடமே என் வரிகள்
அனைத்தையும் படைக்கிறேன்,
அவளுக்கு என் இதயத்தில்
நான் காதல் படைத்ததால்...
-Ajai Sunilkar Joseph




6 கருத்துகள்:

  1. ஒத்தடங்களுக்கு ஒத்த தடங்கள் அவளிடமிருந்து வந்தால் சுகம்.​

    "வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குதான் ராகம் புரிகிறது, நேசிக்கத் தெரிந்த இதயங்களுக்குதான் என் காதல் புரிகிறது, உனக்கெங்கே புரியப்போகிறது" என்று மு மேத்தா சொன்னது போல..

    பதிலளிநீக்கு
  2. வெள்ளைக் காகிதத்தின் மனம் ஏனோ கருமையாய் போனதோ?
    வெள்ளை மனம் படைத்த வெள்ளை காகிதம் நிச்சயம் உணரும் வலிகளின் வரிகள்...
    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!