இன்று எனக்கு பிறந்தநாள்,
ஆனால் ஏன் பிறந்தேன் என்ற
கேள்விதான் எனக்குள்...!
"எத்தனை பாதைகளுக்கு பரிந்துரைகள்?
ஆனால் ஏன் பிறந்தேன் என்ற
கேள்விதான் எனக்குள்...!
"எத்தனை பாதைகளுக்கு பரிந்துரைகள்?
எந்த பாதையில் நான் செல்ல வேண்டும்
என்ற குழப்பங்களுடன் நான்..."
"ஆம்...
நான் என் வாழ்க்கையின் முகவரியைத்
தேடுகிறேன்...
"சிலர் அழுகை என்கின்றனர்,
சிலர் கஷ்டம் என்கின்றனர்,
சிலர் போராட்டம் என்கின்றனர்,
சிலர் வலிகள் என்கின்றனர்,
ஒருசிலர் சந்தோஷம் என்கின்றனர்."
அழுகையை கடந்து வறண்டு போன
என் கண்களுக்கு வசந்தம் ஓர் கானலோ...?
கஷ்டங்களைத் தாண்டியும் என் வாழ்க்கை
என்ன கடக்க முடியாத வானமா...?
போராட்டங்கள் எத்தனையோ போராடினேன்
போர்க்களமே இல்லாமல் போராட்டமா இல்லை
வாழ்க்கையே போர்க்களமா...?
வலிகளே என்றாலும் வலி தீர
ஓர் வழி கூடவா இல்லை...?
சந்தோஷம் என்றாலும் அதுவும் சில காலம்தானோ...?
"இப்படி ஒவ்வொரு பாதைகளிலும் பல உணர்வுகளை
நான் கண்டு புரிந்து கொண்டேன்,
ஆனால்...
எனக்கு மட்டும் ஏன் இந் குழப்பங்கள்,
மேற்கண்ட அத்தனைப் பாதையிலும் விடை கிடைக்காத
புதிர்களே அதிகள் கிடைக்கின்றன,"
எங்கே விடை தேடுவதென்பதே என் குழப்பமே
"விடைகளே இல்லையென்றால் வாழ்க்கை என்ன வட்டமா...?
"இங்கே நான் எதைத்தேடுவது எதை அடைவது...?
"ஓரடி எட்டு வைத்தால் ஈரடி சறுக்கல்,
பொறுமையாக எழலாம் என்றால்
யார்யாரோ மிதிக்கிறார்கள்,
வெடுக்கென எழலாம் என்றால்
பின்னின்று தள்ளப் பலபேர்,"
வாழ்க்கை ஒன்றென்றால் துன்பங்கள்,துரோகங்கள்,
விரோதங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,"
"ஏனிந்தப்பிறவி என்று கலங்குகிறேன்,
விடைதான் கிடைக்கவில்லை,
யாரிடம் விடை கிடைக்குமென்றால் என்னிடமே
உள்ளது என்று அன்பானவர்களின் பேச்சு,
அட போங்கையா நாசமா போச்சு, இதுதான் என் பேச்சு,"
"இங்கு என் தேடல் எதுவென்றுத் தெரியாமலே
அதன் அடைதலைத் தேடுகிறேன்,"
என்னை நானே சோதிக்கிறேன் என்னில் பிழையா?
என் எண்ணத்தில் பிழையா?ஏதும் புரியவில்லை."
20-7-1993 To 20-7-2018 வரையிலான என் தேடல்
எதுவென்று புரியவில்லை...
விடைதான் கிடைக்கவில்லை,
வாழ்கைதான் Black and white ல இருக்கு
Dress ஆவது Colorful ஆ இருக்கட்டும்...
😊😊😊😊
Ajai Sunilkar Joseph
உள்ளது என்று அன்பானவர்களின் பேச்சு,
அட போங்கையா நாசமா போச்சு, இதுதான் என் பேச்சு,"
"இங்கு என் தேடல் எதுவென்றுத் தெரியாமலே
அதன் அடைதலைத் தேடுகிறேன்,"
என்னை நானே சோதிக்கிறேன் என்னில் பிழையா?
என் எண்ணத்தில் பிழையா?ஏதும் புரியவில்லை."
20-7-1993 To 20-7-2018 வரையிலான என் தேடல்
எதுவென்று புரியவில்லை...
சருகாய் மாறிவிட்டால்
மட்கத்தான் வேண்டுமா...?
விதைகளுக்கு உரமாகலாமே...!
நாளை அதுவும் மரமாகலாம்.
தேடுங்கள் கிடைப்பது கிடைத்தே தீரும்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாளில் ஏனிந்த குழப்பம் ? எல்லோருடைய வாழ்விலும் தேடல் உண்டு.
எதையும் தேடாதவன் ஜடம்.
தேடுங்கள் இறுதிவரை
வாழ்க வளமுடன்.
நண்பரின் ஆறுதலான வாழ்த்துக்கு நன்றிகள் பல,
நீக்குஎன் தேடலும் தொடரும். ..
வெள்ளிவிழா வாழ்த்துகள்
பதிலளிநீக்குபொன்விழாவுக்கும் வாழ்த்துவேன்.
நன்றி நண்பரே...!
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Brother 🎂🎂🎂
பதிலளிநீக்குபெயர் தெரியா உறவின் வாழ்த்துகளுக்கு நன்றி...!
நீக்குஒவ்வொன்றுக்கும் வழிகளும் தீர்வுகளும் உண்டு..நமக்குத்தான் தெரிவதில்லை.. தெரிந்தவர்களும் சொல்வதில்லை.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!!
பதிலளிநீக்குஹ ஹா நீங்கள் சொல்வதுதான் வாழ்க்கை என புரிகிறது,
நீக்குஇவ்வளவு பார்த்த பிறகு துவண்டால் எப்படி ?
இன்னும் நெஞ்சை நிமிர்த்தி போராடுவேன்...
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே ...!