லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
திங்கள், 30 ஜூலை, 2018
என்னால் முறிந்த பேனா...
அவள் அறிமுகம் 2
அவள் அறிமுகம் 2
அவளது
முந்தைய அறிமுகம்
👇👇👇👇👇
எழுந்திட நினைத்தேன்
நெஞ்சோடு அணைத்தாள்,
நிமிர்ந்திட துடித்தேன்
இதழோடு இணைத்தாள்,
குறுகுறுப் பார்வையால்
குற்றாலச் சாரலை
என்னுள் வீசிப்போகிறாள்,
நிலைமாறிப் போகிறேன்,
சித்திர விழியாளால்
சிற்பியாய் மாறினேன்,
சிற்பமாய் வர்ணித்தேன்
சிலையென ஆகிறேன்,
மதயானைக் கூட்டமாய்
எனை மோதிப்போகிறாள்,
பட்டென சாய்கிறேன்,
சிட்டென பறக்கிறேன்,
அலைபாய்ந்த கண்ணுக்குள்
சிலையாக நிற்கின்றாள்,
சீறும் அலையாக
நினைவாலே பாய்கிறாள்,
அரை நொடிப் பொழுதும்
பிரிய மறுக்கிறாள்,
கண நொடிப் பொழுதும்
புரிய மறுக்கிறாள்...
![]() |
Ajai Sunilkar Joseph |
சனி, 28 ஜூலை, 2018
துயில் கொள்ளப் போனாயோ...?
துயில் கொள்ளப் போனாயோ...?
முந்தைய கவிதை
👇👇👇👇👇
ஏங்கிநின்றேன்,
எங்கெங்கோ
தேடிப்பார்த்தேன்,
முகிலின் மடியில்
தேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன்,
கிணற்றின் அடியில்
எட்டிப்பார்த்தேன்,
குளத்தில் கொஞ்சம்
மூழ்கிப்பார்த்தேன்,
நான் தேடாத
இடமுமில்லை,
தேடிப்பார்த்த
தடமுமில்லை,
கண்ணெட்டும்
தூரம் தேடுகிறேன்,
இருள் வான் மட்டும்
காண்கிறதே...!
தொலை தூரம்
நின்றே தேடுகிறேன்,
நீயும் தொலைந்தே
போனாய் என்றதினால்,
உன்னைக் காணா
ஏக்கமதில்
தூக்கமில்லை
கண்களிலே,
என் தூக்கமெல்லாம்
கலைத்துவிட்டு
துயில்கொள்ளப்
போனாயோ வெண்ணிலவே...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By...Ajai Sunilkar Joseph
வியாழன், 26 ஜூலை, 2018
தேடித்திரிய நாதியுண்டோ...?
தேடித்திரிய நாதியுண்டோ...?
முந்தைய கவிதை
👇👇👇
"இந்தக்கவிதையை எழுதி வைத்து நெடுநாட்கள்
ஆகிவிட்டது , அதை பதிவிட இன்றுதான் அதற்கு
விதி வழி விட்டது போல..!
இது "மழை" இல்லாமல் வறட்சியை சந்தித்த பூமியை
பார்த்து தன் தலையை சாய்த்து உயிர் மாய்த்த தென்னை
மரங்களைப் பார்த்து மனம் நொந்ததினால் எழுதி வைத்தேன்,
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் பெய்த "மழை"கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பெய்திருந்தால்
இந்த வருத்தம் வந்திருக்குமா...?
இதற்கு காரணம் யார்...?
அதையே இந்தக்கவிதையில் எழுதியுள்ளேன்,
பிழைகள் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்🙏"
உச்சி வெயிலில்
காயும் தென்னை
மண்ணை மஞ்சமாக்கி
சாயுதே இங்கே...!
காணாமல் போன
மாரியும் எங்கே...!
தேடித் திரிய
நாதியும் உண்டோ...!
மாரி மிதக்கும்
கார்முகில் எங்கே...!
சுட்டெரிக்கும் சூரியனால்
தீய்ந்தே போனதோ...
வெட்டும் மரங்களின்
கொட்டும் சாபத்தால்,
தூரத்தின் சூரியன்
பக்கத்தில் ஆனதால்,
சோலை வனமெங்கும்
பாலைவனம் ஆனது
சினம் தணியா ஆதவனின்
சுட்டெரிக்கும் தீ கதிராலோ...!
மெய்ஞானம் மறந்து
விஞ்ஞானம் வளர்த்து
வீண் ஞானம் கொண்ட
மதிகெட்ட மாந்தர்களாலோ...!
இதற்கு நாமும் விதிவிலக்கல்ல,ஒரு மரம் இடையூறு என்றால் அதே வேருடன் வெட்டுவதில் நாமும் கில்லாடிகளே...
அதில் நானும் ஒருவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.
கீழ்காணும் புகைப்படம் கைப்பேசியில் க்ளிக்கியது , எங்கள் வீட்டுப்பக்கம் எத்தனையோ தென்னை மரங்கள்
மாண்டு போயின,இந்தப் புகைப்படத்தில் காண்பது
ஓரிடத்தில் மொத்தமாக மாண்ட தென்னைமரங்கள்,
சாதாரணமாக புகைப்படம் தெளிவாக வரும்,இது
Panorama Option இல் க்ளிக்கியதால் கொஞ்சம் தெளிவு கம்மியாகவே இருக்கும்.
![]() |
Ajai Sunilkar Joseph |
அவள் அறிமுகம் 1
அவள் அறிமுகம் 1
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇👇
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...
அவளது ஊமை
விழிகளின் மௌனத்தை
மொழிப்பெயர்க்க முயன்றேன்,
அவள் நெற்றியொரு
வானென்று கண்டேன்,
அதன் கீழொரு உயிர்
கொண்ட வில்லொன்று
விழிகளில் காதலை நாணேற்றி
எந்தன் உயிர்நாடித் தேடிக்
குறிபார்த்து அடித்திட விழுந்தேன்,
நானும் அவளிடம் காதலில்...!
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇👇
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...
அவளது ஊமை
விழிகளின் மௌனத்தை
மொழிப்பெயர்க்க முயன்றேன்,
அவள் நெற்றியொரு
வானென்று கண்டேன்,
அதன் கீழொரு உயிர்
கொண்ட வில்லொன்று
விழிகளில் காதலை நாணேற்றி
எந்தன் உயிர்நாடித் தேடிக்
குறிபார்த்து அடித்திட விழுந்தேன்,
நானும் அவளிடம் காதலில்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By...
செவ்வாய், 24 ஜூலை, 2018
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...
எல்லாம்
ஒரு
எதிர்பார்ப்புதான்...
முன்தின பதிவு
👇👇👇👇👇
என்
காதல்
கவிதைகளாகத்
தொடர்கிறது...
என் காதலி யாரென்று
கேட்டால்
காதலியே கவிதைகள்
தான் என்பேன்,
நான் காதல்
கொண்டது
அவளிடமா
என் கவிதைகளிடமா...?
அவளால்தான் கவிதைகள்
கண்டேன்,பின்னர்
அவளையே கவிதைகளாய்
கொண்டேன்,
அவள் விழிகளைப்
பார்த்தால் விண்ணைத்
தொடுமளவும் கவிதைகளை
அடுக்கி வைப்பேன்,
நேருக்கு நேர்
நின்று அவள் கூர்வாள்
விழிகளை நான் இன்னும்
பார்க்கவில்லை,
பார்த்திருந்தால்
சொல்லியிருப்பேன்
யார்தான்
அவளென்று...
அவளை ஒருமுறைப்
பார்த்தால் போதும்
ஏழேழு ஜென்மங்களும்
தொடர்வேன்
அவளுக்கான வரிகளை,
அவள் எங்கேயென்று
கேட்க வேண்டாம்
கேட்டால் எனக்குச்
சொல்லத் தெரியாது,
இதயத்திலே
இருக்கிறாளா என்றால்
இதயமாகவே
இருக்கிறாள் என்பேன்,
கண்களிலே
இருக்கிறாளா என்றால்
என் கண்களே
அவள் தான் என்பேன்...
என் விழிகளின்
விழித்திரையில்
அவளே வந்து
சுற்றித்திரிகிறாள்,
என் கனவு
தேசத்தை அவளே
ஆக்கிரமித்து காதலால்
ஆட்சி செய்கிறாள்,
எனக்கு என்னமோ
என்னவள் என் கவிதைகளிலே
உயிர்கொண்டு அதிலே
குளிர்காய்கிறாள்
என்றுத் தோன்றுகிறது,
எங்கே,
எப்படி
அவளை
கண்டுபிடிப்பேன்...?
பூவிடம் கேட்டால்
சொல்லிவிடுமா,
அவளையே
முகவரியாய் கொண்ட
பூங்காற்று சொல்லிடுமா...?
வேண்டாம்...வேண்டாம்...
இரண்டுமே
பூவையவளிடம்
பொறாமை கொள்ளும்
பருவகால வானவில்லிடம் கேட்டால்
கோடி வானவில்லும்
கூடிவந்து குடிகொண்ட
அவளின் புருவம்
பார்த்து நாணம் கொள்ளும்...!
எங்கே
தேடுவேன்
எந்தன்
இதயராணியை...?
காத்திருக்கலாமா
யார்தான் அவளென்று...?
இங்கே காத்திருந்து
கரையோரம் சிதறுகிறேன்
அவளுக்கான
தேடல் வரிகளை,
கொஞ்சம் வாசித்து
எந்தன் யாசிப்பை
புரிந்தவளாய்
வருவாளா...?
காத்திருக்கிறேன்
தேவதையே...
விரைவாய் வா
உன் நெஞ்சோடு
என்னை
அணைத்துக்கொள்ள...!
Ajaj Sunilkar Joseph
திங்கள், 23 ஜூலை, 2018
சிகரெட்...
ஞாயிறு, 22 ஜூலை, 2018
அம்மா...
அம்மா
என்னை உருவில்
காணுமுன்னே
கருவில் கொண்டவள்
அம்மா...!
![]() | ||||||||
Ajai Sunilkar Joseph |
நான் பிறந்ததும்
ஆனந்த வானில்
பறந்திருப்பாள்
அம்மா...!
![]() |
Ajai Sunilkar Joseph |
காற்றை முந்தாணைக்குள்
வடிகட்டி சுவாசிக்கத் தந்த
மூன்றெழுத்து மந்திரம்
அம்மா...!
வடிகட்டி சுவாசிக்கத் தந்த
மூன்றெழுத்து மந்திரம்
அம்மா...!
அவள் இரத்தம் கொஞ்சம்,
அவள் சதையில் கொஞ்சம்,
அவள் சுவாசம் கொஞ்சம்,
அவள் பாசம் கொஞ்சம்,
அவள் ஏக்கம் கொஞ்சம்,
அவள் பரிதவிப்பு கொஞ்சம்,
அவள் வலியில் கொஞ்சம்,
அவள் உணர்வில் கொஞ்சம்,
அவள் உயிரில் கொஞ்சம்,
அவள் அழுகயில் கொஞ்சம்,
அவள் கண்ணீரில் கொஞ்சமாய்,
அனைத்திலும் பிய்த்தெடுத்த
மிச்சமே நான்...
![]() |
Ajai Sunilkar Joseph |
வெள்ளி, 20 ஜூலை, 2018
ஏன் பிறந்தேன்...?
இன்று எனக்கு பிறந்தநாள்,
ஆனால் ஏன் பிறந்தேன் என்ற
கேள்விதான் எனக்குள்...!
"எத்தனை பாதைகளுக்கு பரிந்துரைகள்?
ஆனால் ஏன் பிறந்தேன் என்ற
கேள்விதான் எனக்குள்...!
"எத்தனை பாதைகளுக்கு பரிந்துரைகள்?
எந்த பாதையில் நான் செல்ல வேண்டும்
என்ற குழப்பங்களுடன் நான்..."
"ஆம்...
நான் என் வாழ்க்கையின் முகவரியைத்
தேடுகிறேன்...
"சிலர் அழுகை என்கின்றனர்,
சிலர் கஷ்டம் என்கின்றனர்,
சிலர் போராட்டம் என்கின்றனர்,
சிலர் வலிகள் என்கின்றனர்,
ஒருசிலர் சந்தோஷம் என்கின்றனர்."
அழுகையை கடந்து வறண்டு போன
என் கண்களுக்கு வசந்தம் ஓர் கானலோ...?
கஷ்டங்களைத் தாண்டியும் என் வாழ்க்கை
என்ன கடக்க முடியாத வானமா...?
போராட்டங்கள் எத்தனையோ போராடினேன்
போர்க்களமே இல்லாமல் போராட்டமா இல்லை
வாழ்க்கையே போர்க்களமா...?
வலிகளே என்றாலும் வலி தீர
ஓர் வழி கூடவா இல்லை...?
சந்தோஷம் என்றாலும் அதுவும் சில காலம்தானோ...?
"இப்படி ஒவ்வொரு பாதைகளிலும் பல உணர்வுகளை
நான் கண்டு புரிந்து கொண்டேன்,
ஆனால்...
எனக்கு மட்டும் ஏன் இந் குழப்பங்கள்,
மேற்கண்ட அத்தனைப் பாதையிலும் விடை கிடைக்காத
புதிர்களே அதிகள் கிடைக்கின்றன,"
எங்கே விடை தேடுவதென்பதே என் குழப்பமே
"விடைகளே இல்லையென்றால் வாழ்க்கை என்ன வட்டமா...?
"இங்கே நான் எதைத்தேடுவது எதை அடைவது...?
"ஓரடி எட்டு வைத்தால் ஈரடி சறுக்கல்,
பொறுமையாக எழலாம் என்றால்
யார்யாரோ மிதிக்கிறார்கள்,
வெடுக்கென எழலாம் என்றால்
பின்னின்று தள்ளப் பலபேர்,"
வாழ்க்கை ஒன்றென்றால் துன்பங்கள்,துரோகங்கள்,
விரோதங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,"
"ஏனிந்தப்பிறவி என்று கலங்குகிறேன்,
விடைதான் கிடைக்கவில்லை,
யாரிடம் விடை கிடைக்குமென்றால் என்னிடமே
உள்ளது என்று அன்பானவர்களின் பேச்சு,
அட போங்கையா நாசமா போச்சு, இதுதான் என் பேச்சு,"
"இங்கு என் தேடல் எதுவென்றுத் தெரியாமலே
அதன் அடைதலைத் தேடுகிறேன்,"
என்னை நானே சோதிக்கிறேன் என்னில் பிழையா?
என் எண்ணத்தில் பிழையா?ஏதும் புரியவில்லை."
20-7-1993 To 20-7-2018 வரையிலான என் தேடல்
எதுவென்று புரியவில்லை...
விடைதான் கிடைக்கவில்லை,
வாழ்கைதான் Black and white ல இருக்கு
Dress ஆவது Colorful ஆ இருக்கட்டும்...
😊😊😊😊
Ajai Sunilkar Joseph
உள்ளது என்று அன்பானவர்களின் பேச்சு,
அட போங்கையா நாசமா போச்சு, இதுதான் என் பேச்சு,"
"இங்கு என் தேடல் எதுவென்றுத் தெரியாமலே
அதன் அடைதலைத் தேடுகிறேன்,"
என்னை நானே சோதிக்கிறேன் என்னில் பிழையா?
என் எண்ணத்தில் பிழையா?ஏதும் புரியவில்லை."
20-7-1993 To 20-7-2018 வரையிலான என் தேடல்
எதுவென்று புரியவில்லை...
சருகாய் மாறிவிட்டால்
மட்கத்தான் வேண்டுமா...?
விதைகளுக்கு உரமாகலாமே...!
நாளை அதுவும் மரமாகலாம்.
செவ்வாய், 17 ஜூலை, 2018
பேனா...
கொஞ்சம் தூண்டுகிறேன்
தீண்டிச் செல்கிறாய்
காகிதத்தை
உயிர் பெறுகிறது கவிதை...!
Ajai Sunilkar Joseph
உதிரம் சொட்டுகிறாய்,
காகிதம் சுமக்கிறது,
கவிதை பிறக்கிறது...!
![]() |
Ajai Sunilkar Joseph |
உன் குருதி சிந்தியும்
உருவம்
கொடுக்கிறாய்
என் வார்த்தைகளுக்கு...!
![]() |
Ajai Sunilkar Joseph |
தூண்டலுக்கு
நானிருக்க
தீண்டலுக்கு நீயிருக்க
துவளாமல் அவளிருக்கிறாள்...!
காகிதமாக...
![]() |
Ajai Sunilkar Joseph |
நீ
நனைக்கின்ற
எச்சத்தில்
என்
கவிதைகளே மிச்சம்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By.....
திங்கள், 16 ஜூலை, 2018
சுவாசித்த காற்று எங்கே...?
சுவாசித்த காற்று எங்கே...?
முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇
நீரோடும் ஓடையோரம்
தென்மேற்கு பருவக்காத்து,அடைப்பட்ட அறைக்குள்ளே
வீசுதே மின்சார காத்து...!
கம்மாக்கரை காத்துமிங்கே
காணாமல் போச்சே..!
குளிரும்,தளிரும் போய்
தேசம் சூடாகிப்போச்சே...!
ஆத்தங்கரை காத்தும்
அழிந்தேதான் போச்சா...?
அனல்மூட்டும் காத்தும்
ஆள்வதும் ஆச்சா...?
தென்றலும் இங்கே
தீய்ந்தேதான் போச்சோ...?
தினந்தோறும் வெட்கை
தின்று விட்டுப் போச்சோ...?
பருவக்காத்தும் இங்கே
திசைமாறிப் போச்சே...!
சுவாசக்காத்தும் இங்கே
விஷமாகிப் போச்சே...!
![]() |
Ajai Sunilkar Joseph |
ஞாயிறு, 15 ஜூலை, 2018
கனவில் என் கற்பனை
கனவில் என் கற்பனை
ஆழி முத்துகள் இரண்டை
அவள் விழிகளாய் கண்டேன்,ரசிக்கலாம் என்றே
அருகினில் சென்றேன்,
குழிகள் இரண்டை
அவள் கன்னத்தில் கண்டேன்,
கொஞ்சம் வழுவி
அதனுள் வீழ்ந்தேன்,
எழும்பிட நினைத்தேன்,
மயங்கியே கிடந்தேன்,
மங்ககை விழியும்,கன்னக்
குழியும் போதும் வீழ்த்திட...?
அவளோ பூஞ்சிலை
போன்ற பெண்சிலை,
எனக்குத் தாரமான
தங்கத் தாமரையவள்,
அங்கத்தின் அழகை நான்
இன்னும் சொல்லவில்லை,
என்னில் ஓர் அங்கமாய்
அவள் இருப்பதினால்,
அன்பை அள்ளித் தந்திடுவாள்
அன்னைப் போல தாங்கிடுவாள்,
எனக்காய் வந்த தேவதை
எனக்கு மட்டும் தெய்வமவள்,
கண்களில் கனவு தேவதையாய்
அவளே எந்தன் கலங்கரையாய்,
கருப்போ,வெளுப்போ தெரியவில்லை
அவள் எங்கிருக்காளோ புரியவில்லை...
![]() | ||||||||||||||||||||||||||||||||||
Ajai Sunilkar Joseph |

சனி, 14 ஜூலை, 2018
தனிமையில் ஓர் பயணம்...
தனிமையில் ஓர் பயணம்...
தனிமை நதியில் நாதியற்ற ஓடமாய் நான்.
சொந்தங்களாய் பலரும்,உறவுகளாய் சிலரும்,
நண்பனாய் நீயும்,தோழியாய் அவளும்,
காதலியாய் என்னவளும்,யார் யாரோ
வந்து போன வழித்தடமாய் என்னிதயமும்,
துடுப்பாய் வந்தோரெல்லாம்
தூக்கியெறிய,சொந்தமெல்லாம் தூரமாக,
உறவுகளெல்லாம் உறவறுக்க,
நண்பனும் கடந்து செல்ல,
தோழியும் விட்டு விட்டாள்,
காதலியாய் வந்தவளும் விட்டு விட்டாள்,
எனக்குள்ளே உயிரறுந்த வேதனை,
யாருக்கு நான் செய்த துரோகம்
என்னை விடாமல் துரத்துகிறது என்று...!
இப்படியும் பல நாளாய் சிந்தித்து
பழகிக்கொண்ட நானும்,
சிலரின் அன்பான பேச்சுக்கெல்லாம்
வழுவி விடுகிறேன்,
யாருக்கும் இதயத்தில் இடமில்லை
என்பதால் என்னிதயத்தின்
வழித்தடத்தையும் அழித்து விட்டேன்,
வாழத்தெரியாதவன் என்று என்னை
சொன்னாலும் பரவாயில்லை,
சிதைந்த என்னிதயத்தை தேற்றிக்கொள்ள
தனிமையில் ஓர் இனிமை கானம் தேடி
என் பயணத்தை தொடர்கின்றேன்...
காணொளி
By...Ajai Sunilkar Joseph
சனி, 7 ஜூலை, 2018
நினைவுகளே தோரணமாய்...
நினைவுகளே தோரணமாய்...
தேயாத பெண்ணிலவே
உனைக் காணாத கண்ணினிலேகரைந்தோடும் தாரைகளாய்
என் காதல் கொட்டுதடி,
காற்றொன்று என்னைத்
தாண்டிப் போனால் பெண்ணே
உந்தன் மூச்சும் என்னைக்
கொஞ்சமாய் தீண்டிப் போகுதடி,
வித்தாரக் கண்ணழகே
எந்தன் விழிநீரும் விம்முதடி,
மந்தாரைப் பூவழகே உன்னை
மனதாரக் காதலித்தேன்,
தோளோடு தோள் சாய்ந்து,
உன் மௌனத்தின் சலசலப்பை
சிறு சிறு கவிதைகளய்
மொழிப்பெயர்பேன்,
உன் நளினத்தின் சலனத்தை
சல்லடையில் சலித்தெடுத்தேன்,
என் விழிகண்ட கனவானாய்
தூங்காமல் துயிலெழுந்தேன்,
கலைந்தோடும் முகிலானாய்
நெஞ்சில் அணையாத அகலானாய்,
நிலைகொண்ட புயலானாய்
என்றோ கரை கடந்து விட்டாய்,
நீ மழைமேகமென்றால்
என்னை மனதார நனைத்துவிடு,
எரியாத தீயென்றால் உன்
நெஞ்சோடு அணைத்தவிடு,
நான் இல்லாத ஓர் நாளில்
என் நெஞ்சம் நீயறிவாய்,
உன்னை நினைக்காமல் நானுமில்லை
உன்னை நினையாத நாளுமில்லை...
நெஞ்சோடு மஞ்சம் வைத்தேன்
பற்றி எரிந்த பஞ்சானாய்,
மரணத்தின் வாசலில் பெண்ணே
உன் நினைவுகள் தோரணமா...?
காணொளி
![]() |
Ajai Sunilkar Joseph By... கரையோரம் சிதறிய கவிதைகள் |
செவ்வாய், 3 ஜூலை, 2018
உன்னிடம் தட்சணையாக
உன்னிடம் தட்சணையாக...
உன்னிரு இதழ்களின்
வன்முறைகளுக்கும் மொழியினால்உருவம் கொடுத்துப்பார்க்கிறேன்,
அது முத்தம் என்ற பெயரில்
என்னில் தொடர்வதால்,
கத்தியும்,இரத்தமும் இன்றி
என்னை வீழ்த்தும் யுக்தியை
எனக்கும் கற்றுக்கொடு பெண்ணே...!
உன் விழிவாள் முனையில்
எனை நிறுத்தி சாய்த்து விடாதே,
நால்விழிகளும் மௌன மொழியை
பேசி காதலாய் மொழிபெயர்ப்போம்,
என் காதல் சாம்ராஜ்யத்தையே
உன்னிடம் தட்சணையாக தருகிறேன்...
![]() |
Ajai Sunilkar Joseph By... |
திங்கள், 2 ஜூலை, 2018
காகிதத்திடம் என் காதல்
காகிதத்திடம் என் காதல்
பேனாவின் முத்தத்தடத்தில்
பதிந்த வார்த்தைகளை நேசித்தாள்,
வலிகளுடன் நான் படைத்த
என் வரிகளை நேசித்தாள்,
அந்த வரிகளைப் படைத்த
என் கரங்களை நேசித்தாள்,
வரிகள் வழியே அவள் இதயம்
நுழைந்த கவிதைகளை நேசித்தாள்,
என்னிதயம் வரிகளில் தொடுத்த
காதலை நேசித்தாள்,
இப்படியே அவளுள் சென்ற
என்னை மொத்தமாய் வாசித்தாள்,
இவைகளை யாசித்த அவளோ
இறைவன் படைத்த வெள்ளைத்தாள்,
காகிதமாய் அவளிருக்க என்
பேனாவின் ஒத்தடங்களாய்
காதலைச் சொல்கிறேன்,
அவளிடமே என் வரிகள்
அனைத்தையும் படைக்கிறேன்,
அவளுக்கு என் இதயத்தில்
நான் காதல் படைத்ததால்...
![]() |
-Ajai Sunilkar Joseph |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)