தேடித்திரிய நாதியுண்டோ...?
முந்தைய கவிதை
👇👇👇
"
இந்தக்கவிதையை எழுதி வைத்து நெடுநாட்கள்
ஆகிவிட்டது , அதை பதிவிட இன்றுதான் அதற்கு
விதி வழி விட்டது போல..!
இது "
மழை" இல்லாமல் வறட்சியை சந்தித்த பூமியை
பார்த்து தன் தலையை சாய்த்து உயிர் மாய்த்த தென்னை
மரங்களைப் பார்த்து மனம் நொந்ததினால் எழுதி வைத்தேன்,
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் பெய்த "
மழை"கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பெய்திருந்தால்
இந்த வருத்தம் வந்திருக்குமா...?
இதற்கு காரணம் யார்...?
அதையே இந்தக்கவிதையில் எழுதியுள்ளேன்,
பிழைகள் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்🙏"
உச்சி வெயிலில்
காயும் தென்னை
மண்ணை மஞ்சமாக்கி
சாயுதே இங்கே...!
காணாமல் போன
மாரியும் எங்கே...!
தேடித் திரிய
நாதியும் உண்டோ...!
மாரி மிதக்கும்
கார்முகில் எங்கே...!
சுட்டெரிக்கும் சூரியனால்
தீய்ந்தே போனதோ...
வெட்டும் மரங்களின்
கொட்டும் சாபத்தால்,
தூரத்தின் சூரியன்
பக்கத்தில் ஆனதால்,
சோலை வனமெங்கும்
பாலைவனம் ஆனது
சினம் தணியா ஆதவனின்
சுட்டெரிக்கும் தீ கதிராலோ...!
மெய்ஞானம் மறந்து
விஞ்ஞானம் வளர்த்து
வீண் ஞானம் கொண்ட
மதிகெட்ட மாந்தர்களாலோ...!
இதற்கு நாமும் விதிவிலக்கல்ல,ஒரு மரம் இடையூறு என்றால் அதே வேருடன் வெட்டுவதில் நாமும் கில்லாடிகளே...
அதில் நானும் ஒருவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.
கீழ்காணும் புகைப்படம் கைப்பேசியில் க்ளிக்கியது , எங்கள் வீட்டுப்பக்கம் எத்தனையோ தென்னை மரங்கள்
மாண்டு போயின,இந்தப் புகைப்படத்தில் காண்பது
ஓரிடத்தில் மொத்தமாக மாண்ட தென்னைமரங்கள்,
சாதாரணமாக புகைப்படம் தெளிவாக வரும்,இது
Panorama Option இல் க்ளிக்கியதால் கொஞ்சம் தெளிவு கம்மியாகவே இருக்கும்.
 |
Ajai Sunilkar Joseph |